பாகிஸ்தான் மக்களுக்கு நிதியுதவி அளித்த கிரிக்கெட் வீர்ரகள் – சமூகவலைதளத்தில் எழுந்த எதிர்ப்பு!

பாகிஸ்தான் மக்களுக்கு நிதியுதவி அளித்த கிரிக்கெட் வீர்ரகள் – சமூகவலைதளத்தில் எழுந்த எதிர்ப்பு!

Loading...

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருக்கும் சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பாதிப்பு நம்மை விட அதிகமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1900 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது தொண்டு நிறுவனம் மூலம் அங்குள்ள ஏழை மக்களுக்காக நிதியுதவிக் கோரினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவ்ராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் நன்கொடை வழங்கினர்.

இதற்காக அவர் இருவருக்கும் நன்றி சொல்ல அது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களுக்காக எந்த உதவியையும் செய்யாமல் பாகிஸ்தான் மக்களுக்கு மட்டும் அவர்கள் நிதி அளித்துள்ளதாக நெட்டிசன்கள் அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் செயலில் எந்த தவறும் இல்லை சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக இரு தரப்பினரும் #ShameOnYuviBhajji, #IStandWithYuvi ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*