சக வீரரை ஜாதிய வன்மத்தோடு பேசினாரா யுவ்ராஜ்? விளக்கம் அளித்து வருத்தம்!

சக வீரரை ஜாதிய வன்மத்தோடு பேசினாரா யுவ்ராஜ்? விளக்கம் அளித்து வருத்தம்!

Loading...

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் சஹால் மற்றும் யுவ்ராஜ் சிங் பற்றி சாதிய வன்மத்தோடு பேசியதாக எழுந்த புகாருக்கு விளக்கமளித்துள்ளார்.

கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சமூகவலைதளம் மூலமாக உரையாடி ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளனர். அதன் ஒரு கட்டமாக  இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவ்ராஜ் சிங் சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது யஷ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரைப் பற்றி பேசினார். அப்போது அவர் பேசிய ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Loading...

இதனை அடுத்து, யுவ்ராஜ் ‘ஒருபோதும் நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுடன் பழகியதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் என்னுடைய நண்பரிடம்(ரோஹித் ஷர்மாவிடம்) பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது’ எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே யுவ்ராஜ் சிங் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு முன்னதாக தோனி மற்றும் கோலி ஆகியோரைப் பற்றி பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*