மோடியை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! இந்திய வீரர்களின் ரியாக்‌ஷன்!

India's Prime Minister Narendra Modi leaves from 10 Downing Street in central London on April 18, 2018, after attending a bilateral meeting with Britain's Prime Minister Theresa May on the sidelines of the Commonwealth Heads of Government meeting (CHOGM). / AFP PHOTO / Tolga AKMEN

மோடியை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! இந்திய வீரர்களின் ரியாக்‌ஷன்!

Loading...

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட்டர் ஷாகித் அப்ரிடி இந்தியாவின் பிரதமர் மோடியை மிகவும் மோசமானவர் என விமர்சனம் செய்த நிலையில் அதற்கு இந்திய வீரர்கள் பதிலளித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஷாகித் அப்ரிடி அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைப் பேசி இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான மோதல் போக்கைக் கொண்டுள்ளார். அதில் அவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையிலான பகை கிரிக்கெட்டைத் தாண்டி இரு நாட்டு அரசியல் வரை எதிரொலிக்கும். இந்நிலையில் இப்போது காஷ்மீரில் இந்தியா ராணுவத்தைக் குவித்துள்ள நிலையில் அதைப் பற்றி பேசி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

Loading...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மிருக்கு சென்ற அவர் ‘உலகமே ரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். இங்கு 7 லட்சம் ராணுவ வீரர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பிர் ‘சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார். பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். உங்கள் நாட்டில் பணம் இல்லை. ஆனால் நீங்கள் அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த பேரிடர் காலத்திலும் தீவிரவாதிகளை அனுப்புகிறீர்கள். ’ என பதிலடிக் கொடுத்துள்ளார்.

மேலும் அப்ரிடியின் ட்ரஸ்ட்டுக்கு உதவி செய்த யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக யுவ்ராஜ் சிங் ’ மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச்சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்.’ எனத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*