இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்? சர்ச்சைக் கேள்விகளுக்கு யுவன் பதில்!

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்? சர்ச்சைக் கேள்விகளுக்கு யுவன் பதில்!

Loading...

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இளையராஜாவின் இளையமகனான யுவன் ஷங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு தனது தாயின் மறைவுக்குப் பின்னர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி இஸ்லாம் மதத்தை தழுவினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தனது பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஷாப்ஃப்ரூன் நிஷா என்ற ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போதும் அவரை திருமணம் செய்து கொள்ளதான் மதம் மாறியதாக சொல்லப்பட்டது.

Loading...

இந்நிலையில் அவர் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பல ரசிகர்களும் ‘ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்?’ எனக் கேட்க, அதற்கு அவர் ‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். மேலும் அவர் மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையை இஸ்லாமில் கண்டுகொண்டுள்ளார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசைகளால் நாங்கள் இணைந்திருக்கிறோம்.. ’ எனக் கூறினார்.

ஆனாலும் விடாத ரசிகர்கள் ‘இளையராஜா எவ்வளவு பெரிய கடவுள் நம்பிக்கையாளர்? அவர் மகனை இப்படி மாத்திடீங்களே?’ எனக் கேட்க ஒரு கட்டத்தில் கோபமான ஷாஃப்ரூன் நிஷா  ‘மக்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்?…. நான் வேண்டுமானால் அவருடைய நம்பிக்கை பற்றியும், அவர் ஏன் இஸ்லாமை தேர்வு செய்தார்? என்றும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா? அது உங்களுக்கு திருப்தி அளிக்குமா? ’ என தனது அதிருப்தியை வெளியிட்டார். இதையடுத்து இப்போது இஸ்லாத்துக்கு மாறியது ஏன் என விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றை யுவன் வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நான் இஸ்லாமுக்கு எப்போது மாற முடிவெடுத்தேன் என தெரியவில்லை. அது ஒரு பயணம். என் அம்மா உயிருடன் இருக்கும்போதே அதற்கான தேடல் தொடங்கியது. முதன் முதலில் குரானைப் படிக்கும் போது ஏன் இவ்வளவு கண்டிப்பான வார்த்தைகள் உள்ளன என யோசித்தேன். என் நண்பர் ஒருவர் மெக்கா சென்றுவிட்டு வந்து என்னிடம் ஒரு விரிப்பு ஒன்றை கொடுத்து ’உங்களுக்கு மனம் சோர்வாக இருக்கும் போது இதில் அமருங்கள்’ என்று கூறினார்.

ஒருநாள் என் அண்ணனிடம் அம்மா பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசமாகிவிட்டேன். அப்போது அந்த விரிப்பில் என் கண்ணில் பட்டது. அப்போது ஒரு நண்பர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அது ஒரு வானத்தின் புகைப்படம். அதில் என்ன தெரிகிறது எனக் கேட்டேன். அல்லாஹ் என பதில் சொன்னார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. உடனே என் அறைக்கு சென்று அந்த விரிப்பில் அமர்ந்து என்னை அறியாமல் அழுதேன்.

தலையைக் கீழே வைத்து என் பாவத்தை மன்னித்து விடு இறைவா என்று சொன்னேன். அதுதான் ஒரு திருப்புமுனை. பிறகு மீண்டும் குர்ஆனை எடுத்துப் படித்தேன்.அப்போதும் கண்டிப்பான வார்த்தைகளுடனே இருந்தது. பிறகுதான் புரிந்தது. இது இறைவனுடைய வார்த்தைகள். அது அப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்துகொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*