Connect with us

#24 Exclusive

“500 ரூபாய்” ஒரே நாளில் 50 முதியவர்கள் ! 22 வயதில் பெண் செய்ய கூடிய காரியமா இது?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்து கைதாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிரபலமான அரசு மருத்துவ மனைகளில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையும் ஒன்று, இங்கு பல நோயாளிகள் வருவது உண்டு.

இங்கு பெரும்பாலும் வயதான முதியவர்கள் புறநோயாளியாக தினமும் சிகிச்சைக்கு வருவது உண்டு, இங்கு ஒரு இளம்பெண் கண்ணீல் தண்ணீருடன் மருத்துவமனை முன்பு அமர்ந்திருப்பார், அப்போது வயதான முதியவர்கள் ஏன் அம்மா அழுகிறாய் என்று கேட்டதும் ஓ என அழுது என் தந்தைக்கு உடம்பு சரியில்லை நாங்கள் மொத்தம் 4 பேர் பெண்கள் அவர் இல்லாமல் எப்படி வாழ போகிறோம் என அழுதிருக்கிறார்.

பலரும் அவரது நடிப்பை உண்மை என நம்பி ஆறுதல் சொல்ல திடீரென கையில் இருந்த நாணயம் ஒன்றிணை எடுத்து இது இரண்டு கிராம் தங்க நாணயம் என்றும் இதனை வைத்து கொண்டு தற்போது 500 ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று அவர்களது செல்போன் என்னை வாங்கி வைத்து கொண்டு நான் கால் செய்ததும் 500 ரூபாயை உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டு நாணயத்தை மீண்டும் வாங்கி கொள்கிறேன் என்று கண்ணீர் சிந்தியுள்ளார்.

Loading...

பலரும் அவருக்கு உதவும் நோக்கில் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டில் சென்று பார்க்க அது போலியான நாணயம் என்பது தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கி நோட்டமிட்டனர் சரியாக 3 மாதம் கழித்து மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெண் வர அவரை அப்படியே கைது செய்து தூக்கிவிட்டனர்.

Loading...

விசாரணையில் அவர் 22 வயதான நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தை சேர்ந்த ப்ரியா என்பதும் இரண்டு வருடங்களாக தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்று நடித்து பணத்தை சுருட்டி வருவதும் ஒரு நாளைக்கு 50 முதியவர்களை டார்கெட் செய்து ஏமாற்றி வருவதும் தெரியவந்துள்ளது, கை கால்கள் இல்லாத மாற்று திறனாளி பெண்களே உழைத்து சாப்பிடும் போது 22 வயதான பெண் செய்யக்கூடிய காரியமா இது என பலரும் வசைபாடி வருகின்றனர். இதுபோன்ற நபர்களிடம் உஷாராக இருக்கவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending