வாசலை மட்டும் விட்டுவிட்டு பங்களாவை தரைமட்டமாக்கிய யோகி போலீஸ் ! மனித உரிமை என்பது ரவுடிகளுக்கு கிடையாது என அறிவிப்பு (வீடியோ உள்ளே )

உத்தரப்பிரதேசத்தில் நேற்று ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு நேற்று கிடைத்தது. அந்த தாதா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அந்த ரவுடியை பிடிக்க போலீசார் ரகசியத் திட்டம் போட்டனர்.

அதன்படி, நேற்று அதிகாலையில் போலீசார் பெரும்படையுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். அந்த ரவுடி பதுங்கியிருந்த வீட்டுக்குச் செல்லும் வழியை அடைத்து பாறாங்கற்களைப் போட்டு வைத்திருந்தனர். அந்த கும்மிருட்டிலும் போலீசார் அவற்றை அகற்றி விட்டு, போலீஸ் ஜீப்களில் அந்த வீட்டை நெருங்கியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரவுடி துபே மற்றும் கூட்டாளிகள் உஷாராகி, போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். போலீசாரும் பதிலுக்குச் சுட்டனர்.
ஆனால், போலீசார் வெட்டவெளியில் நின்றிருந்ததால் அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி விட்டனர்.

Loading...

டி.எஸ்.பி. தேவேந்திர குமார் மிஸ்ரா, இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்யாதவ், அனுப்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நெபுலால் மற்றும் போலீசார் பாபு, சுல்தான்சிங், ராகுல், ஜிதேந்திரா ஆகிய 8 பேர் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர். மேலும் 4 போலீசார் காயமடைந்தனர். இதில் போலீஸ் படை நிலைகுலைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, துபே மற்றும் கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர்.

TNNEWS24

இந்நிலையில் அவர்கள் காடுகளில் சென்று பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது, இந்நிலையில் போலீசாருக்கு முதல்வர் யோகி ஒரு உத்தரவிட்டார் அதன்படி அந்த ரவுடியின் பெயரில் இருக்கும் சொத்துக்களை நேரடியாக இடித்து தரைமட்டமாக்க உத்தரவிட்டுள்ளார், இதனையடுத்து இன்று நேரடியாக ரவுடி வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் ஜேசிபி கொண்டு சொகுசு பங்களாவை இடித்து தள்ளினர், வாசலில் இருந்த சொகுசு காரையும் ஜேசிபி கொண்டு நொறுக்கிவிட்டனர்.

இந்நிலையில் ரவுடிகள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ரவுடிகளின் வீடுகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்படும் என்றும் இதுகுறித்து சட்ட ரீதியாக எழும் விஷயங்களை தான் பார்த்து கொள்வதாக யோகி தெரிவித்து இருப்பது அம்மாநிலத்தில் உள்ள மற்ற ரவுடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யோகி வழி தனி வழிதான்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3936 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*