யோகி எடுத்த அதிரடி முடிவு ! தூக்கி மூலையில் வீச திட்டம் !!

உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அம்மாநில மக்களின் நலன் கருதியும், வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டும் மற்ற மாநில முதல்வர்கள் எடுக்காத மிக முக்கியமான முடிவினை எடுத்துள்ளார், இது குறித்து பானுகோம்ஸ் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

Loading...

உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தொழிலாளர் சட்டத்தில் முக்கியமான சில அடிப்படையான தொழிலாளர் உரிமையை காக்கும் சட்டப் பிரிவுகளை தவிர பிற பிரிவுகள் அனைத்தும் 3 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவசர சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.

நீக்கப்படாத , தொடர்ந்து அமலில் இருக்கப்போகும் Labour Law பிரிவுகள் :

Loading...
 1. Workmen Compensation Act 1923 – தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1923
 2. Bonded Labour Act -கொத்தடிமை தடுப்பு சட்டம் 1976
 3. Payment of Wages Act [Section 5] -சம்பளம் கொடுப்பதை உறுதி செய்யும் சட்டப் பிரிவு 5 [ வழங்கப்படவேண்டிய ‘அடிப்படை சம்பளம்’ + ‘காலம் தாழ்த்தாது’ சம்பளம் கொடுப்பதை உறுதி செய்யும் ]
 4. Building and Other Construction Workers Act- கட்டிடத் தொழிலாளர்கள் சட்டம் 1996
  உ.பி முதல்வரின் இந்த முயற்சிக்கு இரண்டு காரணங்கள்.
  உ பி யில் மட்டும், பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்பும் தொழிலாளர் எண்ணிக்கை 15 லட்சம்+ !
  இவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கடமை முதல்வர் யோகிக்கு இருக்கிறது.
 5. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், சீனாவிலிருந்து இடம்பெயரும் தொழில்களை தங்கள் மாநிலத்திற்கு ஈர்க்கவுமான முயற்சியில் இந்திய சுதந்திரத்திற்கும் முந்தையதான சில அரதப் பழசான சட்டங்களை மூன்று வருடங்களுக்கு பூட்டி வைத்து பரீட்சித்துப் பார்க்கிறார் யோகி.

பேரிடரை எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் 70 -80 வருட மாறாத சக்கர சூழலில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் இத்தகைய முயற்சிகள் தேவை தான். இதனால் சில சிக்கல்கள் எழக்கூடும். ஆனால் சிறந்த, உறுதியான நிர்வாகியால் சிக்கல்களை தவிர்த்துவிட முடியும்.

முயற்சி வெற்றி பெறுமானால் இக்கட்டான காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு யோகியின் தலைமையிலான உ.பி. உதாரணப்பாதை அமைத்த மாநிலமாக மாறும். என்று குறிப்பிட்டுள்ளார் பானு கோம்ஸ். கம்யூனிஸ்ட்கள் உருவாக்கிய சட்டங்களை யோகி மூலையில் வீசியிருப்பதன் மூலம் அம்மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*