நேற்று வேதனை இன்று அதிரடியில் இறங்கிய அழகிரி ! ஸ்டாலின் தரப்பு என்ன செய்ய போகிறது?

மதுரை :- நேற்று மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அழகிரி அதிமுகவினர் கூட தன்னிடம் பேசுவதாகவும், ஆனால் திமுகவினர் தன்னை கண்டுகொள்வது இல்லை என வேதனை தெரிவித்தார், அத்துடன் நிலைமை இவ்வாறு இருக்காது என்றும் மாறினால் தெரியும் எனவும் பேசியிருந்தார், நானும் கலைஞர் மகன்தான் நினைத்ததை முடிப்பவன் எனவும் அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Loading...

கடந்த ஒரு சில ஆண்டுகளாக அழகிரி பெரிய அளவில் அரசியல் பேச்சுக்கள் எதனையும் பேசாமல் தவிர்த்து வந்தார், அத்துடன் செய்தியாளர்கள் அவரை விமான நிலையத்தில் சந்தித்த போதுகூட அவர் எதனையும் பேசாமல் தவிர்த்து வந்தார், கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் தான் மீண்டும் சேர்க்கப்படுவேன் என நம்பியிருந்தார் அழகிரி, ஆனால் ஸ்டாலின் பிடிவாதம் காரணமாக அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் அழகிரி தனது ஆதரவாளர்களிடம் ஒன்றை மட்டும் சொல்லியிருக்கிறார், 2009 தேர்தலில் நான் நிற்பேன் மத்திய அமைச்சர் ஆவேன் என யாராவது எதிர்பார்த்து இருப்பீர்களா அதே போல் இனி வரும் காலங்களில் மாற்றம் வரும் என்று கூறியிருக்கிறார், அழகிரியின் நேற்றைய பேச்சு தொலைக்காட்சிகளில் அதிகம் எதிரொலித்தது,இந்நிலையில் நேற்றைய பேச்சோடு நில்லாமல், தனது ஆதரவாளர்களை அழைத்து அழகிரி இன்று தனது வீட்டில் பேசி வருகிறார்.

Loading...

அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக அவரது வீட்டின் முன்பு வைக்கப்பட்ட புத்தகத்தில் கையெழுத்திட்டு சென்றவர்கள் ஆதரவாளர்கள் பட்டியலையும் தற்போது சேகரித்து வருகிறார்கள், இதுதான் தற்போது மதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, அழகிரி என்ன முடிவு எடுக்க போகிறார் என விவாதங்களும் எழுந்துள்ளன.

அழகிரி ரஜினியுடன் இணைந்தால் நிச்சயம் திமுகவின் தென் மாநில வாக்குகள் பிரிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஏற்கனவே இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் சீட்டினை பிரித்து கொடுத்தது, தொடர்ந்து இராமநாதபுரம் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களே முன்னிலை படுத்தப்படுத்தல் போன்ற காரணங்களால் அந்த பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் அழகிரியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும், அதே பாணியில் திமுகவின் சில மூத்த தலைவர்களும் ரஜினியுடன் இணைந்தால் திமுகவில் அது மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்க படுகிறது, இந்த சூழலில்தான் அடுத்து என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாம் ஸ்டாலின் தரப்பு. பெரியார் குறித்து ரஜினி விமர்சனம், அழகிரி கருப்பு துண்டு போட்டிருப்பவர்களை பக்கத்தில் வைத்துள்ளவரை திமுக விளங்காது என திகவினரை விமர்சனம் செய்தது அனைத்தையும் வைத்து பார்த்தால் ஏதோ திட்டம் உள்ளது போல தோன்றுகிறதே?

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*