Connect with us

#24 Exclusive

BREAKING புத்தாண்டு பரிசு சிதம்பரத்தை தொடர்ந்து கனிமொழி கைது? என்ன செய்யப்போகிறது திமுக?

2ஜி மேல்முறையீடு வழக்கில் சாட்சியங்களும் ஆதாரங்களும் இருப்பதால் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் எம் பி ஆ ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு மீதம் உள்ள நிலையில் அதிரடி ஆட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ஜி வழக்கு கடந்துவந்த பாதை :- கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், திமுக எம்.பி. ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து நேற்று 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியான வரை நடந்த விவரம் வருமாறு:
2007மே – தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்பு
ஆகஸ்ட் – 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறை தொடங்கியது
செப்டம்பர் 25 – உரிமத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 1 என அறிவிப்பு
அக்டோபர் 1 – 46 நிறுவனங்களிடம் இருந்து 575 விண்ணப்பங்களை பெற்றது தொலைத்தொடர்பு துறை.

நவம்பர் 2 – வெளிப்படையாக உரிமம் ஒதுக்குமாறு ஆ.ராசாவுக்கு பிரதமர் கடிதம்
நவம்பர் 22 – ஏல நடைமுறை சரியில்லை என்று கூறி தொலைத்தொடர்பு துறைக்கு நிதியமைச்சகம் கடிதம், 2008ஜனவரி 10 – முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு
ஜனவரி 10 – விண்ணப்ப கடைசி நாளை 2007 செப்டம்பர் 25-ஆக இறுதி செய்த தொலைத்தொடர்புத் துறை, திடீரென 25.9.2007 மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமம் பெற தகுதியுள்ளவை என்று அறிவிக்கப் பட்டது.

Loading...

செப்டம்பர் – ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலிசர்வீசஸ் தங்களின் பங்குகளை எடிசலாட், டெலிநார், டோகோமோ நிறுவனங்களுக்கு முறையே அதிக விலையில் விற்றன2009 மே 4 – லூப் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் (சிவிசி) வாட்ச்டாக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் மனு
ஜூலை 1 – விண்ணப்ப கடைசி நாளை முன்கூட்டியே நிர்ணயித்ததை நிறுத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்
அக்டோபர் 21 – பெயர் தெரியாத தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ.

Loading...

அக்டோபர் 22 – மத்திய தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் சிபிஐ சோதனை
நவம்பர் 16 – 2ஜி உரிமம் வழங்கியதில் இடைத்தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கு இருக்கும் தொடர்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ள வருமான வரித்துறைக்கு சிபிஐ கடிதம் நவம்பர் 20 – தொலைத்தொடர்பு துறையின் முக்கிய கொள்கை விவகாரங்களில் சட்டவிரோதமாக சில கார்ப்பரேட்களின் தலையீடு இருந்தது வருமான வரித்துறை தகவலில் தெரிய வந்தது.

2010, மார்ச் 31 – மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் ஒட்டுமொத்த ஏல நடைமுறையும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது மே 6 – ஆ.ராசாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியானது
செப்டம்பர் 13- 2ஜி உரிமம் வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஆ.ராசவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செப்டம்பர் 24 – ராசாவிடம் விசாரணை நடத்த பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு.,

நவம்பர் 10 – 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை
நவம்பர் 14 – அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ஆ.ராசா, 2011 பிப்ரவரி 2 – ஆ.ராசா, அவரது தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, அவரது பதவிக்காலத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலாளராக இருந்த சித்தார்த் பெஹுரா ஆகியோர் கைது
பிப்ரவரி 17 – நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஆ.ராசா
மார்ச் 14 – 2ஜி வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஏப்ரல் 2 – முதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ.
ஏப்ரல் 25 – திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு
மே 20 – கைது செய்யப்பட்ட கனி மொழி திகார் சிறையில் அடைக்கப்பட் டார்
அக்டோபர் 24 – குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு
நவம்பர் 11 – வழக்கு விசாரணை தொடங்கியது
நவம்பர் 28 – கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

2012.பிப்ரவரி 2 – 2ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
பிப்ரவரி 2 – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கை மீது சிபிஐ நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிப்ரவரி 4 – ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்க சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்
பிப்ரவரி 23 – சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சிபிஐஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு.,

மே 15 – ஆ.ராசா ஜாமீனில் விடுதலை
ஆகஸ்ட் 24 – 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க விடுத்த கோரிக்கையில் முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
2013.டிசம்பர் 9 – மக்களவையில் 2ஜி அலைகற்றை விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல்.2014 ஏப்ரல் 25 – ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
மே 5 – நீதிமன்றத்தில் ராசாவின் சாட்சியம் பதிவு நவம்பர் 10 – இறுதி விசாரணை டிசம்பர் 19 முதல் தொடங்கும் என்று அறிவித்தது சிபிஐ நீதிமன்றம் 2015
ஜூன் 1 – 2 ஜி வழக்கில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி முறைகேடாக சென்றதாக அமலாக்கத்துறை தகவல்.,

ஆகஸ்ட் 19 – ஆ.ராசா மீது சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்தது சிபிஐ
நவம்பர் 3 – குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய கனிமொழி மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 2017
ஏப்ரல் 19 – 2ஜி வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவு
டிசம்பர் 5 – வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 21 வெளியிடுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம்அறிவிப்பு..,

டிசம்பர் 21- 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும், சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது, தற்போது 2 ஜி வழக்கில் தரகராக செயல்பட்ட நீடா ராடியார் மூலம் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இருவருக்கும் நடந்த உரையாடல்கள், மற்றும் தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக பேசும் ஆடியோ டேப் உள்ளிட்டவை சிபிஐ வசம் கிடைத்துள்ளது,

மேலும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி ஆ ராசா இருவரையும் சிபிஐ கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை கூறிய நிலையில் அது 2020 தொடக்கத்திலேயே நடந்து விடுமோ என திமுகவினர் கலகத்தில் உள்ளனராம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய திமுக இனி சிபிஐ ஏஜென்சியை எதிர்த்து போராட வேண்டிய நேரம் தொடங்கிவிட்டதோ? முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் 100 நாள்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நேரத்தில் கனிமொழி எத்தனை நாள் சிறை சொல்லப்போகிறார் என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending