Connect with us

#24 Exclusive

யாருப்பா இந்த கவிதையை எழுதியது கடும் உடன்பிறப்புகள் !

யாருப்பா இந்த கவிதையை எழுதியது கடும் உடன்பிறப்புகள் !

சகுகவலைத்தளம் :- கலைஞர் தொலைக்காட்சியில் இவன் தந்திரன் எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் முறை h ராஜா வரை அனைத்து தலைவர்களையும் கிண்டல் செய்திருப்பார்கள் அதே கருத்து சுதந்திரத்தை மையமாக கொண்டு தற்போது நெட்டிசன்கள் திமுகவை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகும் சில மீம்ஸ்கள் அல்லது செய்திகளை எடுத்து பகிர்ந்து வருகிறோம் அந்த வகையில் இன்று மீண்டும் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கவிதை மூலம் விமர்சனம் செய்து யாரோ ஒருவர் எழுதிய கவிதை மீண்டும் இணையத்தில் வலம் வந்தவண்ணம் உள்ளது.

Loading...

இந்த கவிதையை படித்த பல உடன்பிறப்புகள் எவன்டா இப்படி கவிதை எழுதியது என கடும் கோபத்தில் தேடி வருகின்றனர். சரி இணையத்தில் வைரலாகும் அந்த மீம்ஸ் கவிதை உங்களுக்காக :-

Loading...

சத்தம் இல்லாத
டிவி கேட்டேன்
சறுக்கல் இல்லாத
சகோதரி கேட்டேன்

சண்டை போடாத
உறவுகள் கேட்டேன்
சரக்கு போடாத
தொண்டனை கேட்டேன்

காசே இல்லாத
பிரியாணி கேட்டேன்
செலவே செய்யாமல்
செல்போன் கேட்டேன்

பியூட்டி பார்லரில் கடனைக் கேட்டேன்
பஜ்ஜியை கடையில்
மிரட்டிக் கேட்டேன்

சந்தியில் நிக்காத
பிழைப்பை கேட்டேன்
சட்டென வாய்த்திடும்
பதவிகள் கேட்டேன்

காதல் செய்யாத
பிள்ளையை கேட்டேன்
காவி அணியாத
மனைவியை கேட்டேன்

தன்நலம் இல்லா
தந்தையை கேட்டேன்
தானே தீர்ந்திடும்
பிரச்சனை கேட்டேன்

பாரத்பந்தை கொண்டாட கேட்டேன்
பாரத்ரத்னா கொண்டார கேட்டேன்

வைகோ இல்லாத
வாழ்க்கையை கேட்டேன்
சைகோ இல்லாத
புத்தியும் கேட்டேன்
வாயே திறக்காத

துரையை கேட்டேன்
கமிசனை அமுக்கா
ராசா கேட்டேன்
*காலை பிடிக்கும்

காங்கிரஸ் கேட்டேன்*
கழுத்தை அறுக்கா
கூட்டணி கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

என்னை எனக்கே பிடிக்கவில்லை..!
வாழ்வே வாழ்வே
*வேண்டாம் என்று

இவ்வாறு இணையத்தில் அந்த கவிதை வலம்வந்த வண்ணம் உள்ளது. அஜித் திரைப்படத்தில் பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் நீண்ட நேரம் பாடிய பாடலின் வரிகளைத்தான் ஏதோ ஒரு குறும்புக்கார நெட்டிசன் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Trending