இந்த தவறை செய்தீர்கள் என்றால் 3 மாதத்தில் உங்கள் வாகனத்தை அரசே விற்றுவிடும் அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கி விபத்தில் சிக்கும் வாகனங்களை, போலீசார், போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன், ஏலம் விட தமிழக அரசு கடந்த ஆண்டே உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள 2.50 கோடி வாகனங்களில் காப்பீடு செய்யாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை போலீசார் அபராதம் விதித்தும், அவற்றை பறிமுதல் செய்தும், தங்களின் அலுவலகங்கள் நிறுத்துவர்.

Loading...

பின்னர் அந்தந்த வாகன உரிமையாளர்கள், இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி, காப்பீட்டை உறுதி செய்ததற்கான அத்தாட்சி கடிதம் வழங்கினால், வாகனங்கள் விடுவிக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வந்தது. காப்பீட்டுத் தொகை செலுத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாற்றங்களை செய்து, கடந்த, ஜூன், 19ல், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் ஒரு அதிரடி உத்தரவினை கொடுத்துள்ளது, அதன்படி காப்பீடு இல்லாமல் விபத்தினை ஏற்படுத்துவோரின் வாகனங்களை மூன்று மாதத்திற்குள் ஏலம் விட்டு அதன் தொகையை நேரடியாக நீதிமன்ற கணக்கில் செலுத்தவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் ஏற்படுத்தும் விபத்திற்கு எந்த நிறுவனமும் இழப்பீடு தொகை வழங்காது இதனால் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

Loading...

எனவே தமிழக அரசு உடனடியாக பலன் கிடைக்கும்படி இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, எனவே காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கினால் உங்கள் வாகனத்திற்கு நீங்கள் உரிமையாளராக இருக்க முடியாது? எனவே இப்போதே உடனடியாக காப்பீடு செய்து விடுங்கள் அது உங்களை தாண்டி மற்றவர்களுக்கும் பயன்படும் !

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3885 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*