Connect with us

#24 Exclusive

சற்றுமுன் மாரிதாஸ் மீது திமுக வழக்கு களத்தில் இறங்கிய H ராஜா பாஜாக வினர்

சற்றுமுன் மாரிதாஸ் மீது திமுக வழக்கு களத்தில் இறங்கிய H ராஜா பாஜாக வினர்

சமூகவலைத்தளம்.,

சமூக ஆர்வலர் மாரிதாஸ் தொடர்ந்து திமுக மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தனது கருத்துக்களை கொண்டு சென்றுகொண்டு இருந்தார்.

Loading...

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோவில் திமுகவிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் அதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டார். இது திமுகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் திமுக அமைப்பு செயலாளர் பாரதி மூலம் சென்னை கமிசினர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் விவரம் பின்வருமாறு :-

Loading...

திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது 505(2) of IPC and I.T. Act உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி, கழக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் விவரம்:

  1. சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான தி.மு.கவின் நிலைப்பாடு ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உள்ளது.
  2. தி.மு.க குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்துள்ளது.
  3. தி.மு.க இதற்காக பாகிஸ்தானில் இருந்து பணம் பெறுகிறதா? அல்லது தி.மு.க-வே பயங்கரவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுகிறதா?
    மேற்குறிப்பிட்ட அவரது கருத்துகள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவை தவிர வேறொன்றுமில்லை. மாரிதாஸ் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புகிறார்.
    இதற்குக் காரணம், காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தில் தி.மு.க எடுத்துள்ள நிலைப்பாடு பா.ஜ.க அரசுக்கு எதிரானது. “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது ஜனநாயக விரோதமானது; அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது” எனச் சுட்டிக்காட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
    மேலும், காஷ்மீர் மாநிலம் குறித்து எந்தவொரு முடிவெடுப்பதற்கு முன்னரும் காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் நிலைப்பாடு. காஷ்மீர் இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தி.மு.க தெரிவித்த ஆதரவு மாரிதாஸ்களால் வேண்டுமென்றே தவறாகக் கருதப்படுகிறது. அதனாலேயே மாரிதாஸ், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து, அதன் மூலம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்.

சமூக வர்ணனையாளர் என தன்னைத்தானே அவர் கூறிக்கொள்வது உண்மையானால், தி.மு.க-வின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவரது நோக்கம் அதுவல்ல; அவரது முதன்மை நோக்கம் பொய்களைப் பரப்புவதும், தன்னைப் பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்துவதும் தான்.
இப்படி, வெவ்வேறு வகுப்பினருக்கிடையே, வெறுப்பை விளைவிக்கும் வகையில் பொய்களை உருவாக்கிப் பரப்பி வரும் மாரிதாஸ் மீது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். ஆதாரமற்ற, பொய்யான தகவல்களை வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 505 (2)-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், மாரிதாஸ் போன்ற சமூக ஊடக குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கையில் இது போதுமானதாக இருக்காது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் கீழ் இவர்களைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கையைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும் மாரிதாஸ் தனது வலைதள பக்கத்திற்காக, ‘Sudesi Awake & Arise Movement’ மூலம் நன்கொடை வசூல் செய்வதாகவும், அதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் அளித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்பி சமூக அமைதியைக் குலைக்கும் செயலுக்காக அவர் அப்பாவிகளிடமும் நன்கொடை பெறும் அபாயமும் உண்டு. இதற்காக, அவர் ரிசர்வ் வங்கியிடமிருந்தோ அல்லது அரசு நிறுவனங்களிடமிருந்தோ பணம் வசூலிக்க அனுமதி பெற்றாரா என்பதும், இது தொடர்பாக அவர் உரிய ரசீதுகளை வழங்கியிருக்கிறாரா என்பதும் தெளிவில்லை.
எனவே, அவர் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதியைக் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் H ராஜா, மாரிதாஸ் மீது திமுக புகார் அளித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான குரல் என்றும் அவரை அனைவரும் காக்க துணை நிற்போம் என்று களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் மரிதாஸிற்கு ஆதரவாக களத்தில் இருப்போம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending