Connect with us

சினிமா

எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் – தலைவி எழுத்தாளர் புலம்பல் !

தலைவி படத்திற்காகத்தான் செய்த வேலைகளை வாங்கிக் கொண்டு தனது பெயரை இருட்டடிப்பு செய்வதாக எழுத்தாளர் அஜயன் பாலா தனது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

எழுத்தாளர் அஜயன் பாலா தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுடன் இணைந்து திரைக்கதை எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இயக்குனர் விஜய் உடன் இணைந்து பல படங்களில் வேலை செய்துள்ளார். அந்த வரிசையில் விஜய் இப்போது கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து இயக்கி வரும் தலைவி படத்திலும் கதை மற்றும் திரைக்கதையை அவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது பெயரையே படத்திலிருந்து நீக்கி விட்டதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘“சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

Loading...

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

Loading...

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல, இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க மாட்டர்கள் . நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”, என அஜயன் பாலா முகப்புத்தகத்தில் எழுதி அந்த பதிவை நீக்கவும் செய்துள்ளார். இந்த பதிவானது சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending