உலகக்கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் இந்தியா -நியூசிலாந்து இடையான போட்டி நடப்பதில் சிக்கல் !

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி நடைபெறவுள்ளது.

Loading...

இதுவரை இந்த 2 அணிகளுமே தோல்வியை சந்திக்காத நிலையில் இந்த போட்டி சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.

ஆனால் போட்டி நடைபெறவுள்ள நாட்டிங்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதனால் அங்கு எல்லோ அலெர்ட் ( yellow alert ) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading...

இப்போதுவரை மழை பெய்து வருவதால் போட்டி நடப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது , இன்று காலைக்கு பிறகு அங்கு மழை குறைந்தாலும் முற்றிலும் நிற்கவில்லை.

மேலும் இன்று மாலைக்கு மேல் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் 16 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்தியா நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பையில் மோதுகின்றன.

நியூசிலாந்து இதுவரை 3 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் அவை அனைத்தும் இலங்கை , வங்கதேசம் மற்றும் ஆஃகானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் தான்.

ஆனால் இந்தியா வீழ்த்தியது பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை அதனால் இந்தியா அணியின் கையே ஓங்கியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2636 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*