Connect with us

#24 Exclusive

துவங்கியது மூன்றாம் உலகப்போர் ! அமெரிக்கா விமானம் என்று உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான் ?

ஈரானை சேர்ந்த குவாட் படைப்பிரிவின் தலைவராக இருந்த சுலைமானி என்பவரை ஆலில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றது அமெரிக்கா . இந்த சம்பவம் ஈராக் நாட்டில் நடந்தது . இதை தொடர்ந்து ஈரான் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ துவங்கியுள்ளது .

இன்று ஈராக்கில் அமெரிக்கா வைத்துள்ள ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது அதில் 2 ராணுவத்தலங்கள் தகர்க்கப்பட்டதாகவும் . மேலும் 80 அமெரிக்கா ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

இது ஒருபுறம் இருக்க 176 பயணிகளுடன் ஈரான் நாட்டுக்கு மேல் பறந்த உக்ரைன் நாட்டின் போயிங் விமானம் விழுந்த்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர் . இது விபத்து என்று ஈரான் கூறியுள்ள நிலையில் , இல்லை ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது .

Loading...

அந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்ட நிலையில் அதை ஈரான் கைவசம் வைத்துள்ளது அந்த பெட்டி கிடைத்தால் தான் உண்மை வெளிவரும் . இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் மிகப்பெரிய போருக்கு அடிபோடுவது போல உள்ளதால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending