Connect with us

அரசியல்

ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்த்த நிர்மலா, ஸ்ருதி, கனிமொழி அப்படி என்ன ஆபாசமாக பேசினார் ஆசாம்கான் தெரிந்தால் நீங்களும் கோவ படுவீர்கள் !

டெல்லி

லோக்சபா துணை சபாநாயகரும் பா.ஜ., எம்.பி.,யுமான ரமாதேவி குறித்து ஆசாம் கான் தரம் தாழ்ந்து பேசியதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Loading...

முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் நேற்று (ஜூலை 25) நடந்த போது, ஆசாம் கானை கருத்து தெரிவிக்கும்படி துணை சபாநாயகரான ரமா தேவி கேட்டுக்கொண்டார்.

Loading...

அப்போது பேசிய ஆசாம் கான், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் கண்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து உங்களை பார்க்க வேண்டும் என கண்கள் விரும்புகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் . இப்படி பேசுவது முறையல்ல என ரமா தேவி கண்டித்துள்ளார்.ஆசாம் கானின் இந்த பேச்சிற்கு மத்திய பெண் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பெண் எம்.பி.,க்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி உள்ளிட்டோரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண்ணை பாலியல் ரீதியாக விமர்ச்சித்து பேசியது ஒட்டுமொத்த அவையயும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அஸாம்கான் விரைவில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Trending