Connect with us

#24 Exclusive

மதமாற்றத்தை தடுத்த பெண் மருத்துவர் பாரதிக்கு ஏற்பட்ட சோகம் தமிழகத்தில் தான் இப்படி ஒரு நிலைமையா வீடியோ இணைப்பு !!

தமிழகம் முழுவதும் ஜோஸுவா என்ற திட்டத்தின் மூலம் மதமாற்றம் தீவிரமாக நடைபெற்று வருவதாக பலரும் பொது இடங்கள் சமூகவலைத்தளங்களில் குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர், ஆனால் அவர்களை சிலர் மதவாதிகள் என்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் என்றும் குற்றம்சாட்டி மக்களை திசை திருப்பும் செயலில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் வரை அனைவரையும் குறிவைத்து மாத சம்பளத்துடன் பல கும்பல்கள் கையில் பைபுளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் தற்போது திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மதம் குறித்த எண்ணம் அற்ற சக மனிதர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சுந்தரம் நர்சிங் ஹோம் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு பைபிள் கொடுத்து மதமாற்றப் பிரச்சாரம் செய்த கும்பல், பைபிள் கொடுப்பதை தடுத்த டாக்டர் பாரதி கீழே தள்ளிவிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சோகம் அரங்கேறியுள்ளது , பெண் மருத்துவரை தள்ளிவிட்டு ஓடியிருக்கிறார்கள் அதில் மூவரை ஊழியர்கள் உதவியுடன் பெண் மருத்துவர் பிடித்துள்ளார்.

Loading...

அந்த மருத்துவமனையில் இருந்த ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கும் பைபிள் கொடுத்துள்ளார்கள், உடனடியாக அங்கு விரைந்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பேரை திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளார்கள். இதில் மிக பெரிய சோகம் என்னவென்றால் பெண் மருத்துவர் பாரதியின் மருத்துவமனைக்குள் சென்று அவரே தாக்குதலுக்கு உள்ளாகி கும்பல் ஓடியிருக்கிறார்கள்.

Loading...

பெண் மருத்துவர் இது குறித்து கூறுகையில் என் மருத்துவனையில் அனைத்து தரப்பான மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன் இதுவரை யாரையும் மத கண்ணோட்டத்தில் பார்த்தது இல்லை ஆனால் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக அரசு மருத்துவமனை முதல் எங்கெல்லாம் நோயாளிகள், குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இருக்கிறாரார்களோ அங்கு சென்று அவர்களிடம் மத மாறுங்கள் என்று இயலாமையை பயன்படுத்தி மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், இது இந்தியாவில் சட்டப்படி குற்றம்.

ஆனால் இதற்கு யாரும் பயப்படுவதே இல்லை முதலில் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை சிறையில் தள்ளவேண்டும் என்றும், அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது வரும் காலங்களில் மிக பெரிய மாற்றத்தை தமிழகத்தில் உண்டாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் மருத்துவரின் செயல்பாட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதை நடுநிலை பேசும் எந்த ஊடகங்களும், அரசியல்வாதிகள் சமூக செயல்பட்டார்கள் என எவரும் இது வரை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Subscribe our youtube channel
Loading...

Trending