Connect with us

சிறப்பு அரசியல்

பெண்கள் குழந்தைகளை முன்னே அனுப்பி பின்னே இஸ்லாமிய ஆண்கள் செல்ல திட்டம் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு !

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள், கல்வீச்சு, செருப்பு வீச்சு போன்ற அசம்பாவிதங்களால் பொதுமக்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்நிலையில் இன்று சட்டமன்றத்தை முற்றுகை இட உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில்..,

இந்திய சட்டம் தங்களை ஒன்றும் கட்டுப்படுத்தாது என்பது போன்று மிக பெரிய அளவில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சட்டமன்றத்தை முற்றுகை இட போவதாகவும், மசூதிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை மாற்ற வாய்ப்பில்லை என்று கூறி போராட்டத்திற்கு தயாராகி விட்டனர்.

இந்த சூழலில்தான் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா இல்லை ஜமாத் ஆட்சி நடைபெறுகிறதா என மூத்த பாத்திரிக்கையாளர்களே கேள்வி எழுப்பியிருக்கின்றனர் இந்நிலையில் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் காவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நோக்கிலும் தங்களை காத்து கொள்ளவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை..,

Loading...

போராட்டத்திற்கு முன்னே அனுப்ப திட்டமிட்டு தயாராகி வருகின்றனராம், நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். தடையை மீறி சட்டப்பேரவையை நோக்கி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும், மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Loading...

10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், 3 தற்காலிக கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் . போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் போராட்டம் நடத்த இஸ்லாமிய இயக்கங்கள் தயாராகின்றன என்றால் அவர்களது நோக்கம் CAA எதிர்ப்பா? இல்லை கலவரத்தின் மூலம் அரசியல் லாபம் அடையவேண்டியதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending