காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா ! நூதனமாக கொலை செய்த காதலர்கள்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா ! நூதனமாக கொலை செய்த காதலர்கள்!

Loading...

நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் காதலுக்குக் குறுக்கே நின்ற அக்காவைக் காதலனின் துணையோடு கொலை செய்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு 19 வயதாகும் நிலையில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 21 வயது பொறொயியல் மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ராகுலின் காதலை ஏற்காததால் அதன் பின்னர் அவரது தங்கையைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது தங்கை ராகுலின் காதலை ஏற்றுக் கொள்ள இருவரின் காதலுக்கு பெண்ணின் அக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Loading...

இதனால் கோபமான அந்த பெண் தன் அக்காவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்குக் காதலனின் உதவியை நாடியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து காதலனை போன் செய்து வர சொல்லி முதலில் அவரின் கழுத்தை கயிற்றால் நெறித்துள்ளனர். பின்னர் அவரின் கை நரம்பை வெட்டிவிட்டுள்ளனர். இதையடுத்துக் காதலன் சென்று விட பெற்றோருக்கு போன் செய்து அக்கா தற்கொலை முயற்சி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை தற்கொலை வழக்காக போலீஸார் இதைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவில் கழுத்தை நெறித்துதான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலிஸார் அந்த பெண் இறந்த நேரத்தில் வீட்டில் இருந்த தங்கையின் போனை சோதனை செய்ததில் ராகுலுக்கு போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்ட அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*