முன்னாள் திமுக துணைப்பொதுச்செயலாளர் விபி துரைசாமி – இன்று பாஜகவில் ஐக்கியம்?

முன்னாள் திமுக துணைப்பொதுச்செயலாளர் விபி துரைசாமி – இன்று பாஜகவில் ஐக்கியம்?

Loading...

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி பி துரைசாமி இன்று பாஜகவில் சேர இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமி பாஜக புதிய தலைவர் எல் முருகனை சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசியலில் எதிர் எதிர் கூட்டணியில் இரு அரசியல் பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது திமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்த,  விபி துரைசாமி பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்பட்டது.

Loading...

இதுபற்றி கேள்வி எழுப்பியபோது அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அவரின் இந்த பேச்சு திமுக தொண்டர்கள் மத்தியில் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்த அவர் திமுகவில் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் அந்த பதவியில் நியமிக்கபடுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் அந்த பரபரப்பு முடிவதற்குள் வி பி துரைசாமி இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அவர் இன்று கமலாலயம் சென்று எல் முருகன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*