Connect with us

முகப்பு

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறாரா? – பிரதமர் அலுவலகம் தகவல் !

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறாரா? – பிரதமர் அலுவலகம் தகவல் !

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகி வரும் மோதேரா மைதானத்தை ட்ர்ம்ப் திறந்து வைப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 700 கோடி ரூபாய் செலவில்  63 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது பிரம்மாண்டமான மைதானம். இதில்  1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.  இந்த மைதானத்தில் மார்ச் மாதம் நடக்க இருந்த ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கான போட்டியை நடத்த பிசிசிஐ தலைவர் விரும்பினார். ஆனால் கட்டுமானப் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் அந்த போட்டிகள் வங்கதேசத்துக்கு மாற்றப்பட்டன.

Loading...

இந்நிலையில் 2 நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் இந்த மைதானத்தை திறந்து வைக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்றும் அவர் இந்த மைதானத்தை சுற்றி பார்க்க மட்டுமே அழைக்கப் பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Loading...

மேலும் ட்ரம்ப்பின் வருகையின் போது சச்சின் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் உண்மையில்லை என சொல்லப்பட்டுள்ளது.

Loading...

Trending