ஏப்ரல் 14க்குள் நல்ல செய்தி வரும்! மாஸ்டர் டிரைலர் குறித்து நடிகர் தகவல்!

ஏப்ரல் 14க்குள் நல்ல செய்தி வரும்! மாஸ்டர் டிரைலர் குறித்து நடிகர் தகவல்!

Loading...

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றி நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் . இப்போது கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Loading...

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இன்னும் இரு தினங்களில் வெளியாக இருந்த இந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.  இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுபோல இப்படத்தில் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனின் சமூகவலைதளப் பக்கத்தில் படத்தின் டிரைலர் எப்போது ரிலிஸாகும் எனக் கேள்வி எழுப்பினார் ரசிகர் ஒருவர்.

அந்த ரசிகருக்குப் பதிலளித்த மகேந்திரன் ’செல்லக்குட்டி… நானும் உன்ன மாரி வெயிட்டிங்தான். டீசர் அல்லது டிரெய்லர் ரிலிஸ் பண்ணா நல்லா இருக்கும். கவலைப்படாதீங்க, ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் ஒரு நல்ல அப்டேட் வெளிவரும்’ எனக் கூறினார். ஆனால் இந்த தகவலை திரித்து ஏப்ரல் 14 மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர், அதைப்பார்த்து பதறிப்போன மகேந்திரன் மீண்டும் ஒரு டிவிட் மூலம் ‘எப்பா ராசா, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுல்ல, அந்த ஒரு கணக்குல நானா சொன்னேன், ஒரு ரசிகனா உங்களை மாதிரி நானும் வெயிட் பண்ணிட்டுதான் இருக்கேன். மத்தபடி எனக்கு ஒண்ணுமே தெரியாது’ எனக் கையை விரித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*