Connect with us

சினிமா

கமலும் இல்லை? விஜய் டிவியும் இல்லை? பிக்பாஸ் சீசன் 4 அப்டேட் !

கமலும் இல்லை? விஜய் டிவியும் இல்லை? பிக்பாஸ் சீசன் 4 அப்டேட் !

பிக்பாஸ் சீசன் 4 ஐ கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்ற செய்தி உண்மையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி சீரியல்களில் கடுமையானப் போட்டி கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பதும், அது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் விவாதிப்பதுமாக இருந்து வருகின்றனர்.

Loading...

தமிழில் இந்நிகழ்ச்சியைக் கடந்த மூன்று ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கலகலப்பாகவும் போட்டியாளர்களுக்கு சரியான முறையில் அறிவுரைகள் வழங்கி அவர் தொகுத்து வழங்குவது நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. அதனால்தான் மற்ற மொழிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பிரபலங்கள் தொகுத்து வழங்கிவந்த நிலையில் தமிழில் மூன்று சீசன்களையும் கமல் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

Loading...

இந்நிலையில் கடந்த சில நாட்களுகு முன்னர் இந்த ஆண்டு தொடங்க இருக்கும் சீசன் 4 ஐ இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாக கமல் தொகுத்தளிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் ஒளிபரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சியின் கிளை நிறுவனமான கலர்ஸ் தமிழ் இந்த ஆண்டு ஒளிபரப்பும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த இரு தகவல்களையும் விஜய் டிவி தரப்பு தற்போது மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  

Loading...

Trending