தொடரே நடக்குமா என்று தெரியவில்லை… ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்த குழப்பம்!

தொடரே நடக்குமா என்று தெரியவில்லை…  ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்த குழப்பம்!

Loading...

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருந்த தொடரின் அட்டவணையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போது வரை எந்தவொரு தொடரும் நடப்பது நிரந்தரமில்லை என்று சொல்லப்படுகிறது. ஐசிசி அக்டோபர் மாதம் நடக்க இருந்த உலகக்கோப்பை தொடரையே இரண்டு வருடங்களுக்கு தள்ளி வைக்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறது.

Loading...

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கல் அந்த தொடரின் அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இதனால் தொடர் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஊடகங்கள் வெளியிட்ட அட்டவணையின் படி

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன், 2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு), 3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் மற்றும் 4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி இரு நாட்டு வாரியங்களும் இன்னும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*