Connect with us

#24 Exclusive

கொலை குறித்து சர்ச்சை பேச்சு திமுகவின் மனுஷ்ய புத்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

Published

on

சமூகவலைத்தளம் :- மனுஷ்யபுத்திரன் என்ற புனைபெயரில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் திமுகவை சேர்ந்த அப்துல் ஹமீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

திமுக குறித்து கேள்விகளை எழுப்பி வருபவர்களில் பத்திரிகையாளரான மதன் ரவிச்சந்திரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் இருவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடப்பட்டு வருவதாக அவர்கள் தங்கள் வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர், இந்நிலையில் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அப்துல்ஹமீது சர்ச்சைக்குரிய வகையில் இருவருக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டதை குறிப்பிட்டு இந்த ஊரில் இனி கவுரவமாக கொலையாகி கூட சாகமுடியாது போல என்று வன்முறையை தூண்டும் விதமாக மதன் மற்றும் மாரிதாஸ் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

Loading...

இதுகுறித்து பலரும் அவரது கருத்தினை எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர், உங்களை போன்ற சொந்த பெயரில் வெளியில் உலாவரமுடியாத ஆட்கள் எல்லாம் மக்களை கொலை செய்வது குறித்து பேச வெட்கமாக இல்லையா என்று விஜயகுமார் எனும் நபர் பதிவிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் இப்படித்தான் மமதா பானர்ஜி அரசை சேர்ந்தவர்கள் முதலில் கிண்டல் செய்து பதிவிட்டுவிட்டு பிறகு சில மாதங்களில் பத்திரிகையாளர்களை கொன்ற வரலாறு உண்டு என்றும்..,

Loading...

முதலில் இந்த மனுஸ்யபுத்திரனை காவல்துறையினர் கைது செய்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர், இதுவே ஒரு பாஜவை சேர்ந்த ஒருவரோ இல்லை திமுக இல்லாத வேறு ஒரு கட்சியை சேர்ந்தவர் இந்த கருத்தை சொல்லியிருந்தால் தமிழக ஊடகங்கள் இப்படித்தான் அமைதியாக இருக்குமா என்ற கேள்வியினையும் எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552