மனைவியுடன் இந்தியா வரும் டிரம்ப், நேரே குஜராத் செல்கிறார் வெற்றியை பறிக்க யோசனை !!!

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழலில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்கள் முன்பு இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் ஹௌடி மோடி என்ற நிகழ்ச்சியில் மூலம் இந்தியர்கள் இடையே உரையாற்றினார், அப்போது மிக பெரிய அளவில் அமெரிக்கர்களே ஆச்சர்ய படும் வகையில் இந்தியர்கள் கூட்டம் கூடியது.

Loading...

மோடி அமெரிக்காவில் இந்தியர்களை சந்தித்தன் , பின்னணியில் டிரம்ப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத்தான் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் பாஜக அதனை மறுக்கவில்லை மாறாக உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் இந்திய பிரதமரை எதிர்பார்த்து காத்திருந்ததாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. உண்மையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தேர்தலில் வெற்றியை கொடுக்கும் இடத்தில் தற்போது இந்தியர்கள் வளர்ந்து விட்டனர்.

இதுநாள் வரை வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது அதனை அடுத்துதான் இந்து கோவிலுக்கு மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தி வாக்குகளை சேகரித்தார் இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் சான்சன் அவர் வெற்றியும் பெற்றார், அதே போல் இந்தியர்கள் வாக்கு டிரம்ப்பிற்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என அக்கட்சி கருதுகிறது.

Loading...

அதற்கு இந்தியர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற மோடியை உதவியை டிரம்ப் நாடுவதாக கூறப்படுகிறது, மேலும் இந்திய பயணங்களின் போது இந்தியர்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடங்களுக்கு செல்ல டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதுகுறித்து பி ஐ பி வெளியிட்ட செய்திக்குறிப்பில்

பிரதமர் தி நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் தடொனால்டு டிரம்ப், அவரது மனைவி த மெலானியா டிரம்ப்  ஆகியோர் இந்தியாவில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கின்றனர்.  அதிபர் திரு டிரம்பின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். 
இந்தப் பயணத்தின் போது, அதிபர் டிரம்ப், அவரது மனைவி ஆகியோர் புதுதில்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சிகளில்  பங்கேற்பதுடன் இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடல்  நடத்துவார்கள். 

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உலகளாவிய உத்திபூர்வமான உறவு, இருநாடுகளின் மக்களுக்கு இடையில் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, விழுமியப் பகிர்வுகள், புரிந்துணர்வு மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது.  பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரின் தலைமையின் கீழ்  வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலக விஷயங்களில் ஒத்துழைப்பு உட்பட  அனைத்துத் துறைகளிலும்  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்ததுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளும் அதிகரித்துள்ளன.  இந்தப் பயணம்,   இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும் மற்றும் உத்திபூர்வமான கூட்டாண்மையை மேலும்  வலுப்படுத்தவும் இருதலைவர்களுக்கும் பெரிதும் வாய்ப்பாக அமையும்.  என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை அமெரிக்க அதிபர்கள் டெல்லி மட்டுமே வருகை தந்துள்ளனர் இந்த முறை டிரம்ப் குஜராத் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மக்கள் அமெரிக்காவில் அதிகம் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*