ரஜினியின் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் ? நியாயமான காரணமா ?

ரஜினியின் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் ? நியாயமான காரணமா ?

Loading...

ரஜினி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோவை டிவிட்டர் நீக்கியதன் பின்னணி வெளியாகியுள்ளது.

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றிணை வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் 14 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். அதற்காகதான் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மோடி ஊரடங்கை அறிவித்துள்ளார் எனக் கூறியிருந்தார்.

Loading...

ஆனால் ரஜினியின் இந்த 14 மணி நேரக் கணக்கு உண்மைக்குப் புறம்பானது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவரும் திமுக எம் பி யுமான செந்தில்குமார் ‘வெறும் 14 மணிநேரம் மக்கள் ஊரடங்கு உத்தரவின் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. தயவுசெய்து நடைமுறையைப் புரிந்துகொள்ளுங்கள்.’ எனக் கூறியிருந்தார். இதுபோல பலரும் தங்கள் கருத்துகளை டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் ரஜினியின் வீடியோ டிவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது எனக் கூறி அந்த வீடியோ நீக்கப்பட்டது. இது குறித்து ரஜினி ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய டிவிட்டர் இந்தியா ‘கொரோனா வைரஸ் எத்தனை மணி நேரத்தில் செயல் இழக்கும் என்பது குறித்து இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை. மனிதர்கள் மற்றும் சுற்றுப்புற வெப்பத்தின் அடிப்படையில் சில மணி நேரங்கள் தொடங்கி சில நாட்கள் வரையிலும் கொரோனா செயலாற்றும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.’ எனத் தெரிவித்து ரஜினியின் வீடியோ நீக்கப்பட்டதற்கானக் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*