Connect with us

#24 Exclusive

பாடாய் படுத்திய சூர்யா: வெறுப்பின் உச்சத்தில் இயக்குனர் ஹரி!

சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த படம் குறித்த அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஹரியின் கதையில் சூர்யா பல திருத்தங்கள் கூறியதாகவும் இதுவரை ஹரியின் தான் முடிவு செய்த கதையில் இவ்வளவு திருத்தங்கள் செய்ததில்லை என்றும் ஆனாலும் வேறு வழியின்றி சூர்யாவின் பேச்சை கேட்டு அனைத்து திருத்தங்களையும் செய்து வருவதாகவும் இதனால் கதையை இறுதி செய்ய கால தாமதமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது

சூர்யாவின் திருத்தங்களால் தற்போது கிட்டத்தட்ட மொத்த கதையும் மாறிவிட்டதாகவும், தற்போது இயக்குனர் ஹரி வெறுப்பின் உச்சத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இந்த படத்தை அவர் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இதனை அடுத்து இரண்டே மாதஙளில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Loading...

மேலும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது மாளவிகா மோகனன் ஹீரோயினாக ந நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending