மிரட்டப்பட்டாரா திருமாவளவன் ஏன் தடை செய்யப்படவேண்டும்?

சமூகவலைத்தளம் :- நாடு முழுவதும் அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல்கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றிருந்தார்கள், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் வழக்கில் தொடர்புடையவர்களும் அமைதியான முறையில் தீர்ப்பை ஏற்ற நிலையில்.,

Loading...

திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார், இது நியாமான தீர்ப்பு இல்லை என்றும் சாஸ்திரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும் நீதிமன்றங்களில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்றும் விமர்சனம் செய்திருந்தார், அவரின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அயோத்தி தீர்ப்பு குறித்து எதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசினாரோ அதே தொனியை திருமாவளவனும் பேசியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேனி பொம்மிநாயகன் பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களின் பின்னே அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கிறோம், முன்பெல்லாம் எங்களுக்கோ எங்கள் சமூகத்திற்கோ ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக வருவார், அல்லது கருத்து சொல்லுவார் இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த பெண்ணின் உடலை கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறில் சில இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபர்கள் எங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தினார்கள்.

Loading...

கிராமங்கள் தாக்கப்பட்டன ஆனால் அதுகுறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காமல் இருந்த திருமாவளவன் பிரச்சனை பெரிதான பின்பு எங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காமல் தாக்குதல் நடத்தியவர்களையும் சந்தித்து தன்னை அவர்களுக்கு எதிரி இல்லை என்றே காட்டிக்கொள்ள முற்பட்டார் அன்றோடு வெறுத்துவிட்டேன் என்றார், மேலும் தற்போதெல்லாம் அவர் சொந்த சமூகத்தை பற்றி கவலை படுவதை காட்டிலும், தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய ஆதரவாளர் என்று காட்டிக்கொள்வதிலேயே முனைப்பு காட்டுவதாக வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அயோத்தி பிரச்சனை குறித்து தனது முகநூலில் நேரலையில் கருத்து தெரிவித்து வந்த திருமாவளவனை யாரோ இரண்டு நபர்கள் எப்படி பேசவேண்டும் என்று பின்னணியில் இருந்து சொல்ல அதனை போலவே திருமாவளவன் பேசியதாகவும் கூறப்படுகிறதுஅது வீடியோவில் பிரதிபலிக்கிறது . ஏன் திருமாவளவனை சிலர் இயக்கவேண்டும் அவர் மிரட்டப்படுகிறாரா? இல்லை தான் சொன்னதுபோல் இந்து மதத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா? என்ற பல கேள்விகள் பொதுவெளியில் கேட்கப்படுகின்றன. மேலும் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கருத்தையே பிரதிபலிக்கும் விடுதலை சிறுத்தைகளை தடை செய்யவேண்டும் என்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.

அதுதான் அந்த ஒரு இளம் இஸ்லாமிய இளைஞருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ?

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*