வரலாறு படத்தில் கமல் நடிக்காதது ஏன் ? – நடன இயக்குனர் ஆச்சர்யத் தகவல் !

வரலாறு படத்தில் கமல் நடிக்காதது ஏன் ? – நடன இயக்குனர் ஆச்சர்யத் தகவல் !

வரலாறு படத்தில் கமல் நடிக்காதது ஏன் ? – நடன இயக்குனர் ஆச்சர்யத் தகவல் !

வரலாறு படத்தில் முதலில் கமல்தான் நடிக்க இருந்ததாகவும் பின்னர் அவருக்குப் பதிலாக அஜித் நடித்ததாகவும் நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகருக்கு பதில் வேறொரு நடிகர் நடிப்பது இயல்பானது. அப்படி உருவான பல படங்கள் மெஹா ஹிட்டாகியுள்ளன. அதுபோல அஜித்துக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது வரலாறு. தொடர் தோல்விகளில் அஜித் இருந்த போது அவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றிப் படமாக வரலாறு அமைந்தது.

Loading...

இந்த படத்தில் அஜித்துக்கு நடனம் மற்றும் நடிப்புக்கு உதவியாக இருந்த நடன இயக்குனர் சிவசங்கர் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் முதலில் இந்த படத்தை கமலை வைத்துதான் இந்த படத்தை இயக்க இருந்தார். ஆனால் கமல் அப்போது வேறு வேலைகளி பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் அஜித் தயங்கினாலும் அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்தார் கே எஸ் ரவிக்குமார். அஜித்துக்கு நடனம் மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களின் உடல் அசைவுகள் குறித்து 25 நாட்கள் கூடவே இருங்து சொல்லிக் கொடுத்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...
Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *