Connect with us

#24 Exclusive

ஏன் டெல்லியில் JNU பெரியார் விடுதியை தங்கினோம் டெல்லியில் இந்து ராஷ்ட்ரீய தளம் அதிரடி விளக்கம் !

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர், இதற்கு இடதுசாரிய அமைப்புகள் ABVP மீது குற்றம் சுமத்தினர்,இதனை ABVB அமைப்பு மறுத்து வந்தது, இந்த சூழலில் JNU பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு HRT அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் ஏன் JNU இடதுசாரிய மாணவர்களை தங்கினோம் என்ற விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது என்றும் தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம், மற்ற பல்கலைக்கழகங்களில் தேச விரோத செயல்கள் நடைபெற்றால் தாக்குதல் நடத்துவோம் எனவும் இந்து ராஷ்டிரிய தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்திரி தெரிவித்துள்ளார்.

JNU வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள பெரியார் விடுதியில் இடதுசாரிய தேசத்திற்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களை இந்தியாவிற்கு எதிராக மூளை சலவை செய்துவருவதாகவும், கல்லூரிக்கு வரும் பலரை அங்குள்ள தீவிர இடதுசாரிய சிந்தனை கொண்ட ஆசிரியர்களே தவறான பாதைக்கு அழைத்து செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனால் தான் பொறுத்து பார்த்த பலர் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Loading...

இதற்கு முன்னர் தமிழகத்தில், சென்னையில் IPL போட்டி நடத்தக்கூடாது என பாரதிராஜா உட்பட பலர் சேர்த்து நடத்திய போராட்டத்தின் போது பெண்கள் உட்பட பல IPL பார்க்கவந்த ரசிகர்களை நாம் தமிழர் கட்சியின் உடை அணிந்த சிலர் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அப்போதுகோபத்தின் வெளிப்பாடு என பலர் விளக்கம் அளித்ததும் அதே பாணியில் தற்போது டெல்லியில் தேசத்திற்கு எதிராக செயல்பட்டதால் தங்கினோம் என்று இந்து ராஷ்டிரிய தளம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

ஒரு மாதத்திற்கு முன்னர்தான் JNU பல்கலைக்கழகத்தில் திமுக அதன் மாணவர் அமைப்பை தொடங்கியதும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending