மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கல் – தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை!

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கல் – தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை!

Loading...

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் தமிழகத்துக்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.தற்போது அமெரிக்காவிலேயே அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

மற்ற நாடுகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்தியாவிலும் கொரோனா தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300 ஐ தாண்டியுள்ளது. 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 6 ஆக உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்காக ஒதுக்கிய நிதியில் தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தை விட பாதிப்பு(300க்குள்) கம்மியாக உள்ள உத்தரபிரதேசத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு 510 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் ஓரவஞ்சனை என தமிழக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல் பாஜக ஆட்சி செய்யாத தென்னிந்திய மாநிலங்கள் எல்லாவற்றுக்கும் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*