யார் “பரதேசி” விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில் வீடியோ வைரல் சந்தி சிரித்த மானம் !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாதம் இந்திய அளவில் சப் டைட்டில் போட்டு வைரல் ஆகிவருகிறது என்றால்.., நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜிவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என்று சீமான் பேசியதை மைய கருத்தாக கொண்டு விவாதம் நடைபெற்றது.

Loading...

விவாதத்தை நெறியாளர் ராஜாதிருவேங்கடம் தொகுத்து வழங்க., காங்கிரஸ் சார்பில் திருச்சி வேலுசாமியும், ஹசினா சையதும் கலந்து கொண்டார்கள் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜா அம்மையப்பன் என்றவர் கலந்து கொண்டார். தொடக்கத்தில் அமைதியாக சென்ற விவாதம் இடையில் சூடு பிடிக்க தொடங்கியது. சீமான் கருத்தால் 7 பேர் விடுதலைக்கு பாதிப்பு ஏற்படாதா என்று நெறியாளர் கேள்வி எழுப்ப அப்போதுவிவாதத்தில் பங்கேற்ற நாம் தமிழர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவரும் சீமானையும், சோனியாகாந்தியையும் கடுமையாக தாக்கி கொண்டனர்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்மணி நாம் தமிழர் கட்சியின் ராஜா அம்மையப்பனை அவன் இவன் என்று பேச பதிலுக்கு அவர் பிச்சைக்காரி, பிச்சைக்காரன் என்று பேச விவாதமே சிரிப்பாய் சிரிக்க தொடங்கியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் நபர்களால் பகிரப்பட்டு தயவு செய்து இது போன்ற விவாதங்களை அதிகம் ஏற்பாடு செய்யுங்கள் என்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading...
https://twitter.com/kk_madurai/status/1184647747133042688?s=19

இந்த வீடியோ இந்தியா முழுவதும் NATION WITH NAMO குழுவினர் சப் டைட்டில் போட்டு பரப்பி வருகின்றனர். சீமான் குறித்த விவாதத்தில் பங்கேற்க வேண்டாம் என திமுகவினர் ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*