பிரதமர் மோடி தன்னை மறந்து கொஞ்சி விளையாடிய குழந்தை யார் தெரியுமா?

டெல்லி.,

Loading...

பிரதமர் மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிறு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகை படத்தை வெளியிட்டு மிகவும் முக்கியமான தனது நண்பர் இன்று என்னை காண வந்திருப்பதாக கூறி புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவு சில நிமிடங்களில் வைரலாகியது, மேலும் அவர் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தினை பலரும் பகிர்ந்து வந்தனர், இன்னும் ஒரு சிலரோ தங்களது சமூகவலைத்தளத்தில் முகப்பு படமாக மோடி குழந்தையுடன் விளையாடும் படத்தினை மாற்றியுள்ளனர்.

Loading...

பத்திரிகையாளர் மாலன் குழந்தைகள் எல்லாரையும் குழந்தைகளாக மாற்றிவிடும் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். தற்போது மோடியின் இளம் நண்பன் யார் என்ற தேடுதல் இணையத்தில் நடக்க அதற்கான பதில் கிடைத்துள்ளது. தனது கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் மோடியை பார்க்கவேண்டும் என்று தொடர்ந்து கடிதம் எழுதிவந்திருக்கிறார்.

மேலும் தனது குழந்தை உங்களை பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழலில்தான் தனது கட்சி தொண்டரின் குடும்பத்தை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்திருக்கிறார் மோடி, அத்துடன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படத்தினையும் மோடி பகிர்ந்துள்ளார்.

தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் அதிகமாக வைரலாகி வருகிறது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*