ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தடை விதித்த உலக சுகாதார நிறுவனம்- காரணம் இதுதான்!

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தடை விதித்த உலக சுகாதார நிறுவனம்- காரணம் இதுதான்!

Loading...

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்ற்யுள்ளவர்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத்தாண்டி உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரையிலும் கொரோனாவுக்கு என்று இதுவரை எந்தவொரு தடுப்பு மருந்தும் இல்லாத நிலையில் மலேரியாவுக்குக் கொடுக்கப்படும் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மருந்து நல்ல பலன் தருவதாக சொல்லப்பட்டது. அதனால் இந்தியாவிடம் இருந்து அந்த மருந்தா அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மிரட்டி பெற்றார். ஆனால் அந்த மருந்தைப் பயன்படுத்தினால் இதய துடிப்பு அதிகமாதல் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் உருவாகும் என மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் இப்போது இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதைப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உறுதி படுத்தினார். ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெறும் நோயாளிகள் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக விகிதத்தில் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் கடந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பல நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தியானது மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*