Connect with us

விளையாட்டு

டெஸ்ட் உலகக்கோப்பையில் தோனியின் 7-ம் எண் யாருக்கு தெரியுமா ?

Published

on

இதுவரை ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே உலக கோப்பை நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் உலகக்கோப்பையை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.

அதற்கான பட்டியல் புள்ளிகளின் விவரம் , எப்படியெல்லாம் தொடர் நடத்தப்படும் எப்படி இறுதி போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும் , என்பதுபற்றிய முழு விவரங்களையும் ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறுகிறது அதன் இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்றதால் அவரின் ஜெர்ஸி எண்ணான 7 ஆம் எண் பொறித்த ஆடையை யார் அணிவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் முறையாக இந்த தொடரில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு எண் மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட ஆடை வழங்கப்படுகிறது.

இதனால் தோனியின் 7 ஆம் எண் பொறித்த ஆடையை அணிந்து விளையாட பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபிறகு அவரின் எண் 10 பொறித்த ஆடையை அணிந்து வேறு எந்த வீரரும் சர்வதேச போட்டியில் விளையாட கூடாது என்று ஐசிசி அறிவித்தது , சச்சினுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி இதை செய்தது.

அதேபோல இப்போதும் தோனியின் 7 ஆம் எண் பொறித்த ஆடைக்கும் அவ்வாறே செய்யவேண்டும் என்று தோனியின் ரசிகர்களும் , பிசிசிஐ யும் கூறியுள்ளது.

டெஸ்ட் உலகக்கோப்பை துவங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் ஐசிசி என்ன முடிவு எடுக்கும் என்பதை பலரும் உற்றுநோக்கியுள்ளனர்.
நாம் அறிந்த வரை தோனியின் 7 – ம் யாருக்கும் வழங்க படாது என்றே தெரிகிறது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share