எங்க அந்த 3 சென்ட் இடம் அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஜோதிமணிக்கு ஆப்பு !

கரூர் :- கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் பல்வேறு அதிரடி வாக்குறுதியை அளித்தனர்.

Loading...

அதில் ஒன்றுதான் கரூரில் இடமில்லாத 25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்றும் அதற்கு உதயசூரியன் நகர் என்று பெயர் வைத்து அனைவருக்கும் இடம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். அதோடு இல்லாமல் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் கட்டிட வரைபடங்களை காட்டி அங்குள்ள மக்களுக்கு விளக்குவதுபோல், செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் பிளானை காட்டி மக்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்தனர்.

இந்நிலையில் இருவரும் வெற்றிபெற்ற போதும் உதயசூரியன் நகர் குறித்து வாயே திறக்கவில்லை மாறாக அமெரிக்கா சென்ற ஜோதிமணி பல லட்சங்களில் சுற்றிவருகிறார் என்று ஊருக்குள் எதிர் தரப்பு கொளுத்தி போட, இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு இங்கே தானே வரணும், இப்ப எந்த பிளானை காட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று ஏமாந்த வாக்காளர்கள் கையில் அவர்களுக்கே உரிய பொருளுடன் காத்திருக்கிறார்களாம்.

Loading...

மறுபக்கம் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் ஆலையில் 3 நாட்களுக்கு மேலாக வருமானவரித்துறை ஆய்வு நடத்தி வருகிறார்கள், இதனால் உள்ளாட்சி தேர்தலில் ஜோதிமணி வாக்குகேட்க தொகுதி பக்கம் சென்றால் முறையான கவனிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*