Connect with us

#24 Exclusive

உள் வாடகைக்கு விட்டுள்ளதா காங்கிரஸ் ! எப்போது கடையை மூடலாம் ? தன் சொந்த கட்சி மற்றும் ப சிதம்பரத்தை கடுமையாக தாக்கிய பெண் தலைவர் .

நடந்துமுடிந்த டெல்லி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான சுழலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றிபெற்றனர் . வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும் , பாஜக 38.5 சதவீத வாக்குகளும் பெற்றனர் ஆனால் தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் வெறும் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது .

இது காங்கிரஸ் கட்சி டெல்லியில் காணாமல் போனதையே காட்டுகிறது . என்னதான் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜக தோல்வியை கொண்டாடினர் அதில் ஒருவர் தான் முக்கிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் .

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மி மிக பெரிய வெற்றி . டெல்லி வாழ் மக்கள் பாஜகவுக்கு பாடம் கற்பித்துள்ளனர் மத ரீதியாக மக்களை பிளவு படுத்த நினைப்பவர்களுக்கு இது படுதோல்வி என்று பதிவிட்டிருந்தார் . இதற்க்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும் டெல்லி வேட்பாளருமான ஷர்மிஸ்த்ர முக்கர்ஜீ நான் பணிவுடன் கேற்கிறேன்

Loading...

எனக்கு ஒன்றை மட்டும் தெளிவு படுத்துங்கள் பாஜகவை தோற்கடிக்கும் பணியை காங்கிரஸ் மாநில கட்சிகளுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளதா ? இல்லை என்றால் நமது கட்சியின் மோசமான தோல்வி பற்றி பேசாமல் ஆம் ஆத்மீயின் புகழை பாடுவது ஏன் ?

Loading...

காங்கிரஸ் மாநில கட்சிகளிடம் பணிகளை கொடுத்துவிட்டது உண்மை என்றால் நமது கடையை எப்போது மூடப்போகிறோம் என்று கட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் . இந்த செய்தி வேகமாக பரவிவரும் சுழலில் அதற்க்கு இதுவரை ப சிதம்பரம் எந்த பதிலும் கூறவில்லை

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending