Connect with us

#24 Exclusive

எத்தனை முறை சொல்வது வாட்ஸ் ஆப் -க்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு !

Published

on

சமூகவலைத்தளங்களில் முன்னணியில் உள்ள தளங்களில் ஒன்று வாட்ஸாப் facebook நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸாப் செயலியை உலகிலேயே அதிக அளவில் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங்கள் இந்திய. சட்டத்திற்கு கட்டுப்படுவதில்லை என்று கூறி கொண்டிருந்த நிலையில் மத்திய அரசு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

புரளிகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது, அதனை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் சிறப்பு எண்கள் ஏற்பாடு செய்யபட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸாப் சார்பில் தெரிவிக்கப்பட்டது, இந்த நிலையில் இந்தியாவில்தான் சிறார்கள் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகம் என்ற தகவலும் அது வாட்ஸ் ஆப் செயலி மூலம் அதிக அளவில் பகிர படுவதாகவும் இதனை தடுக்க auto ban முறையில் எந்த நடவடிக்கையும் வாட்ஸ் ஆப் எடுக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

சமூக தளங்களில் சிறார்களை பாதிக்கும்
ஆபாசமான பதிவுகளை தடுக்கும்
நடவடிக்கைகளுக்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட
நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுப்பதாக
மத்திய அரசு அதிகாரிகள் தகவல்
தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வாட்ஸ்
ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மத்திய
அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

மேலும் குறிப்பிட்ட கால கெடுவினை நிர்ணயம் செய்து அதற்குள் ஒத்துழைப்பு நல்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இதில் வாட்ஸ் ஆப் செயலி இந்திய சட்டதிருத்தத்திற்கு ஏற்ப மாறவில்லை என்றால் செயலிக்கு இந்தியாவில் அதிக பட்சமாக சில மாதங்கள் தடை விதிக்கவும் அதிலும் கோரிக்கைகள் நிறைவேற்ற படவில்லை என்றால் முற்றிலும் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending