தோனியை பார்த்து கதறும் பாகிஸ்தான் ! தோனி செய்தது சரியா ? தவறா ?

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய வீரர் தோனி கையில் ராணுவப் பச்சையில் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்திருந்தார். அதில் ராணுவ முத்திரை இடம்பெற்றிருந்ததால் பல்வேறு விதமான விவாதங்களைக் கிளப்பியது. 

Loading...

இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒரு விளையாட்டுப் போட்டியில் ராணுவத்தின் முத்திரையோடுக் கூடிய கிளவுசை அணிந்து விளையாடுவது, அந்த விளையாட்டின் மாண்பைக் குலைக்கும் விதமாக இருக்கிறது எனச் சிலரும், தோனி அவ்வாறு அணிந்து விளையாடுவதில் தவறில்லை எனச் சிலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் படி நிர்வகிக்கும் அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிய தடை விதித்தது.

Loading...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது வீரர்கள் தங்களின் கைப்பட்டை  மூலமாகவோ, பயன்படுத்தும் உபகரணங்கள் அல்லது அணியும் ஆடைகள் மூலமாகவோ எந்த வித தகவல்களையும் காண்பிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோக் கூடாது. அப்படிச் செய்யவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வீரர்களிடமோ அல்லது கிரிக்கெட் வாரியத்திடமிருந்தோ அனுமதி பெற்று பின், ஐசிசியிடம் முறையிட்டு மேல் அனுமதி பெறவேண்டும். அந்த தகவல் அரசியல், மதம்  அல்லது இனம் அடிப்படையிலான தகவல் என்றால் நிச்சயம் அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த விவகாரங்களில் ஐசிசியே இறுதி முடிவெடுக்கும். 

அணி வீரர்கள் அல்லது கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தபிறகு, ஐசிசி நிராகரித்தால் சர்வதேச போட்டிகளில் வீரர்கள் அந்தக் குறிப்பிட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வண்ணம் எதையும் அணியக்கூடாது என ஐசிசியின் சட்டம் தெளிவாகச் சொல்லுகிறது.

இந்நிலையில் நேற்று அவசரமாகக் கூடிய பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் புல்வாமா தாக்குதலை நினைவுக்கூறும் விதத்தில் ராணுவ தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு ஐசிசியிடம் அனுமதி வாங்கியதைப் போல், தோனி ராணுவ முத்திரையுடன் கூடிய கிளவுஸை அணிந்து விளையாடுவதற்கும் ஐசிசியிடம் அனுமதி பெறப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஐசிசியிடம் அனுமதி பெறுவதற்கான கடிதமும் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து பிசிசிஐ-ன் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, தோனி ராணுவ முத்திரைப் பதித்த அந்த கிளவுஸை இனி அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசியின் விதிப்படி விக்கெட் கீப்பிங் கிளவுசில் ஒரே ஒரு விளம்பர முத்திரை மட்டுமே இடம்பெற வேண்டும். ஏற்கெனவே தோனியின் கிளவுஸில் ‘எஸ்ஜி’ நிறுவனத்தின் முத்திரை இடம்பெற்றுள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் எஸ்ஜி முத்திரையோடு சேர்ந்து ராணுவ முத்திரையும் அணிந்திருந்தார். இது விளம்பர முத்திரை இல்லை என்பதால் முதல் தடவை செய்த இந்த தவறுக்கு அபராதம் எதுவும் வழங்கப்படவில்லை.

ஆனால் இரண்டாம் முறை விதியை மீறினால், போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாம் முறை என்றால் 50 சதவீதம், நான்காம் முறை 75 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

தோனி கிளவுஸில் அணிந்திருந்தது, இந்தியாவின் ராணுவத்தின் உயர்தர படைப்பிரிவான பேராஷூட் ரெஜிமெண்டின்  ‘பலிகான்’ முத்திரையாகும்.  போரின்போது விமானத்தில் பறந்து எதிரியின் எல்லைக்குள் குதித்து இறங்கி, அதிர்ச்சித் தாக்குதல் நடத்துவது  பாராஷூட் ரெஜிமெண்ட் வீரர்களின் பணி. ஒவ்வொரு நாட்டு ராணுவத்துக்கும்  ‘பேராஷூட் ரெஜிமெண்ட்’ என்ற படைப் பிரிவு உள்ளது. அவர்கள் எல்லோரும்  மெருண் வண்ணத் தொப்பி அணிவார்கள். 

மெரூண் வண்ண தொப்பி அணிந்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு உலகளவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் மிகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. காரணம் பாராஷூட் ரெஜிமண்டில் தேர்வாவதற்கு ராணுவ தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. அதன் பிறகு 90 நாட்கள் நடக்கும் பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இத்தேர்வுகள் உடல், மனம், மூளை என அத்தனையையும் சோதிக்கும் தேர்வாகவும், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடினமாகவும் இருக்கும். முக்கியமாக பறக்கும் விமானத்திலிருந்து பல நூறு அடிகளிலிருந்து அந்தரத்தில் குதித்து பாதுகாப்பாக பேராஷூட் மூலம் தரை இறங்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்த மெரூண் வண்ண தொப்பியை அணிய முடியும்.

தோனி நம் இந்திய பேரா ஷூட் ரெஜிமெண்ட் பிரிவின் கவுரவ லெஃப்டிணண்ட் கர்னல் என்பதும், பறக்கும் விமானத்திலிருந்து அந்தரத்தில் குதித்து தரை இறங்கும் பயிற்சியை தோனி பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*