கடலை மிட்டாய்க்கு GST எதற்கு என கேட்டவர்கள் எங்கே? இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்கு தள்ளி சாதித்தது இந்தியா !

கடலை மிட்டாய்க்கு GST எதற்கு  என கேட்டவர்கள் எங்கே?  இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்கு தள்ளி சாதித்தது இந்தியா !

உலகின் வல்லரசாவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் சரியாக பொருளாதாரத்தை முறைப்படுத்தாத காரணத்திற்காக இதுவரை நம்மால் அந்த கனவை அடைய முடியவில்லை, இருப்பினும் தற்போது அதனை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசு நாடுகளான பிரான்ஸ் பிரிட்டன் இரண்டையும் ஓவர்டேக் செய்து 5 ம் இடத்தில் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா ஜெர்மன் ஜப்பானை ஓரங்கட்டி விட்டு 3ம் இடத்திற்குவர முடியும் என்கிறது ஐஎம்எப். 2010 ம் ஆண்டு 9 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மிக பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே இந்தியாவின் உண்மையான உற்பத்திதிறனை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் கடலை மிட்டாய்க்கெல்லாமா ஜிஎஸ்டி என்று சிலர் கேட்டார்கள் அவர்களுக்கு இப்போது ஏன் GST வரி என்பது புரிந்திருக்கும், எங்கள் ஊரில் ஒரு கடலை மிட்டாய் கம்பெனிவைத்து இருந்தவர் 10 வீடுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார், எந்த கணக்கும் கிடையாது. எங்கள் தெருவில் உள்ள ஒருவர் மொத்த காய்கறி கமிசன் கடை வைத்து இருந்தார் காலையில் 4-10 மணி வரை தான் கடையில் வேலை இருக்கும்.

Loading...

ஒரு நாளைக்கு சர்வசாதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும். எந்த கணக்கு வழக்கும் கிடையாது. இதெல்லாம் 1990களில் நான் நெல்லையில் இருந்த பொழுது கண் கூடாக பார்த்து இருக்கிறேன். அப்பொழுதே அவர் கோடீஸ்வரர்.

Loading...

எந்த ஒரு வரியையும் அவர் கட்டியதில்லை வியாபாரத்தில் பல கோடி சம்பாதிக்கும் லட்சகணக்காணோர் இதுவரை ஒத்தை ரூபாயை
கூட வரியாக செலுத்தியது இல்லை. ஆனால் அரசாங்கம் சரியில்லை என்று அந்த ஆள் பீடி குடித்து க்கொண்டே குறை சொல்லிக் கொண்டு இருப்பார்.

இவர்கள் அனைவரும் வரி செலுத்த ஆரம்பித்தால் இவர்களின் உற்பத்தியும் கணக்கில் வர ஆரம்பித்தால் மோடியின் கனவான 5 ட்ரில்லியன் ஜிஎஸ்டியை இந்தியா 2025 க்குள் எட்டிவிடும்.
பீடி குடிக்கிறவன் கூட இப்பொழுது ஜிடிபி பற்றி பேசுகிறான் என்றால் அதற்கு மோடி தான் காரணம்.ஒரு காலத்தில் பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே உலவி வந்த ஜிடிபி என்கிற வார்த்தை இப்பொழுது
டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் கேட்கிறது என்றால் மோடியை குறை சொல்வதற்காவது ஜிடிபியை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் இப்பொழுது கிராமங்களில் கூட மொபைல் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனை படுவேகமாக சென்று கொண்டு இருக்கிறது பல விசயங்களை இன்று சாமானியமக்கள் அறிந்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் மோடி தான்

இதற்கு மேல் இந்தியாவில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள். மோடி தலைமையில் இந்தியா நல்ல திசையில் மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறது என்பதை வெளிநாடுகளே உணர்ந்து கொண்டுள்ளன. விரைவில் இந்தியா வல்லரசு கனவை அடையும் அப்போது உலகம் இந்தியர்கள் வசம் இருக்கும்.

திரு -விஜயகுமார்

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *