Connect with us

#24 Exclusive

என்ன இப்படி சொல்லிடீங்க வெண்பா ! அதுசரி !

CAB எனப்படும் குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் போன்றோர் மசோதா நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கு உதயநிதி போன்றோரை மறைமுகமாக கிண்டல் அடித்து CAB இஸ்லாமியர்களுக்கு எதிரானதா இல்லையா என விளக்கம் அளித்துள்ளார் பத்திரிகையாளர் வெண்பா கீதையன் அவர் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு :-

CAB இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டபின் கொஞ்சம் புரிதல் கொண்ட கட்டுரைகள் ஏதாவது தென்படுமா என்று facebookஇல் நோக்கினேன். இடது மற்றும் முற்போக்குவாதிகள் ஏதோ என் இருப்பிடமே இல்லாமல் ஆகும் போன்ற அபாய நிலை மிகைப்படுத்தல்களுடன் எழுதி, இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சமூட்டுகிற பரப்புரைகளாகப் பதிவிடுகின்றனர். இந்த மசோதாவில் இருக்கிற ஒரு பெருங்குறை இலங்கை என்கிற நாட்டைக் குறிப்பிடாதது. ஏனெனில் இலங்கை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே தனிநாடாக இருந்தது. அதற்கு முன்பும் வரலாற்றில் லங்கை எப்போதும் தனிஅரசாகத்தான் இயங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தானும் பங்களாதேஷும் அப்படி கிடையாது. ஆஃப்கானிஸ்தான் பரந்த பாரதநிலத்துடன் மேலும் வரலாற்றுத் தொடர்புகள் கொண்டது.

     1900களின் தொடக்கத்தில் ஒட்டாமன் கலிஃபட்டை பாதுகாக்க இந்தியாவில் கிலாஃபட் இயக்கம் தொடங்கப்பட்டது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்காக இவ்வியக்கத்தைத் தம் அமைப்புகளோடு இணைத்துக்கொண்டார். ஆனால் அன்றைய முஸ்லீம் லீக் மற்றும் இந்துமகா சபை போன்றவை தேசியக்கொள்கையைப் பின்பற்றியதால் மதம்சார் அரசு அமைவதற்கான கொள்கைசார்பு கொண்ட கிலாஃபட் இயக்கத்தை எதிர்த்தன. ஆனால் பிற்காலத்தில் ஜின்னா மதம்சார் தனிநாடு கேட்பதற்கு இவ்வியக்கக் கொள்கை ஒரு ஊற்றுமுகமாக அமைந்தது. 

      சுதந்திரத்திற்குப்பின் தனிநாடுகளாக அமைந்த பாகிஸ்தான் மற்றும் கீழை பாகிஸ்தானில் பூர்விகமாக இருந்த இந்துகள், ஜெயின்கள், பார்ஸிகள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குடியேறிய இஸ்லாமியர்களால் சிறுபான்மையினராகினர். மேலும் ஆஃப்கானிஸ்தான் பௌத்த தொன்மங்கள் கொண்ட ஓர் பழமையான நிலம். பல படையெடுப்புகளும் போர்களும் நடந்து அங்கே சிறுபான்மையென பவுத்தர்கள், சீக்கியர்கள், இந்துகள் குடியேற்றம் மாறிமாறி அமைந்தன.

கீழைப்பாகிஸ்தானில் சிறுபான்மையரான பங்காள இந்துகள் உள்நாட்டுக்கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வடகிழக்கிந்திய மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். பிறகு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்து கோயில்கள் பலவும் தரைமட்டமாக்கப்பட்டதோடு பங்காள இந்துகளின் நிலம் பிடுங்கப்பட்டு பெண்கள் சீரழிக்கப்பட்டு பல படுகொலைகள் நடக்க உயிர்பிழைத்தால் போதுமென ஏராளமான இந்துகள் மேற்குவங்காளத்தை நோக்கிக் கிளம்பினர். இவ்வாறு தத்தமத்து நாட்டு உள்நாட்டு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் உரிய ஆவணங்களோடும் ஆவணங்களற்றும் டிசம்பர் 2014ற்கு வரை குடியேறிய மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக நல்வாழ்வு அளிக்கிற வகையில் இயற்றப்பட்டதுதான் இம்மசோதா.

Loading...

மேலும் குறிப்பிட்ட பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இம்மசோதாவுக்கு விலக்கு உண்டு. அத்துடன் CABயால் இந்திய இஸ்லாமியர்களுக்கு யாதொரு பாதிப்பும் கிடையாது. ஏன் வெளியேறி வரும் இஸ்லாமியர்களை குடிமக்களாக அறிவிக்கவில்லையெனில் அவர்களது நாடே இஸ்லாமியநாடுகள்தாம். இன்னும் சொல்லப்போனால் CAB நிறைவேற்றப்பட்டது கிழக்கு மற்றும் மேற்குப்பாகிஸ்தானாகப் பிரித்துத் தந்து அப்பகுதிகளின் சிறுபான்மையினரை பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கியமைக்காக இந்திய அரசு செய்கிற பிரயாசித்தம் என்றும் சொல்லலாம்.

Loading...
    எனவே இம்மசோதாவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அகதிகளெனக் குடியேறியுள்ள இலங்கைத் தமிழ்மக்களுக்கும் இந்தியக்குடியுரிமை பெற்றுத்தர போராட வேண்டுமே தவிர இம்மசோதாவை எதிர்த்துத் தேவையில்லாமல் மக்களை அச்சப்படுத்துதல் பயனற்றது. தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு இந்தியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்தால் மெய்யாக மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கின்றனர் என்று பொருள். அதைவிடுத்து strategist ஆலோசனையில் காகிதங்களைக் கிழித்து வீசி கவனஈர்ப்பு செய்துகொண்டிருந்தால் கடைசிவரை காகிதக் கிழிப்பும் வெளிநடப்பும்தான் செய்ய நேரிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயிரை கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி நகலை கிழித்து விளம்பரம் ஏற்படுத்தினால் இப்படி ஒற்றை விளக்கத்தில் முடித்துவிட்டீர்களே என கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Loading...

Trending