வீட்டில் எந்த இடத்தில் பீரோவை வைக்க வேண்டும் வாஸ்து சொல்வது என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் எந்த இடத்தில் பீரோவை வைக்க வேண்டும் வாஸ்து சொல்வது என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

Loading...

ஆன்மீகம்.,
இந்தியர்களுக்கு பெரும்பாலும் வாஸ்து குறித்து தெரிந்து கொள்வதும், ஜோதிட பலன்களை அதிகம் அறிந்து கொள்வதையும் விரும்புவார்கள், அவற்றில் முக்கியமானது வாஸ்து திசைகள் சில குறிப்பிட்ட பொருள்கள் இந்த திசையில் இருக்கவேண்டும், இருக்க கூடாது என வாஸ்துவில் பல ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிலர் அதிகமாக சம்பாரித்தும் பணம் வீட்டில் தங்குவதே இல்லை என்றும் சிலர் உழைத்தாலும் பணம் வரவு இருப்பதில்லை என்றும் கவலை படுகின்றனர், அதற்க்கு தங்கள் வீட்டில் இருக்கும் பீரோ திசையும் காரணம் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

Loading...

முக்கியமாக பணம், நகை என முக்கிய பொருள்களை பீரோவில் வைப்பதால் பிரோவின் திசை முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

வாஸ்துபடி அடிப்படை திசைகள் என்பது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் வாஸ்திற்கு அடிப்படையாக உள்ளது . அவை ஒவ்வொன்றும் 45 டிகிரிக்கள் கொண்டவை .
சாஸ்திரப்படி நிருப்தி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . தென்மேற்கு திசையில் பீரோவை வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர் .

சிலருக்கு எந்த திசையை நோக்கித் கதவை திறக்க வேண்டும் என்று சந்தேகம் வரலாம், தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறு அல்லது கிழக்கு பக்கம் கதவை திறப்பதுமாக பீரோவை வைக்கலாம்.

சிலரது வீடு இந்த மாதிரி திசைகளில் அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா கவலை வேண்டாம் வாயு மூலை எனப்படும் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் தங்கள் பீரோவை வைக்கலாம்.

இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்றும் பலரும் தெரிவித்துள்ளனர் . ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்றால் சரி செய்து பார்ப்பதில் தவறில்லையே?

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள மேலே கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும் ( dailyhunt )

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*