எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன் கிடைக்கும். முக்கியமாக எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற கூடாது தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டுப் பூஜை அறைக்கும் நமது வாழ்க்கைக்கு ஒளி தரக்கூடியது நாம் ஏற்றும் விளக்குகள் தான். வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வைப்பதன் மூலம் சகல நம்மைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கையான ஒன்று. இப்படி நம் வீட்டிற்கு சகல நன்மை மற்றும் செல்வங்களும் பெற்று தரும் விளக்கினை, எந்த எண்ணெயில் ஏற்றுவது என்பது பற்றி நம்மில் எல்லோருக்கும் சந்தேகங்கள் பல உண்டு. எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் எந்தெந்த நன்மை கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

Loading...

கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இந்த இரண்டு எண்ணெய்யிலும் கண்டிப்பாக விளக்கு ஏற்றக்கூடாது. இது நமக்கு தீமையை தான் அளிக்கும். பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. வீட்டில் உள்ள கஷ்டம் மற்றும் கடன் மறைந்து வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழவும், செல்வ வளத்தை பெறவும் பசு நெய் தீபம் ஏற்றலாம்.

எள்ளை ஒரு சிறிய வெள்ளைத் துணியில் சிறிய முடிச்சாக கட்டி அதை நல்லெண்ணெயில் போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் சனிபகவானின் ஆசியைப் பெறலாம் என்பது ஐதீகம் மற்றும் கண்திருஷ்டியும் படாமலும் பாதுகாக்கலாம். ஏழரைச்சனியில் உள்ளவர்கள் இந்த தீபத்தை ஏற்றினால் கஷ்டங்கள் குறையும்.

Loading...

பொதுவாக வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றுவதால் குல தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்பதை சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள். வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றும் பொழுது நமக்கு மட்டுமல்லாமல் நம் உறவினர்களுக்கும் பலன் கிடைக்கும். செல்வம், ஆரோக்கியம், நீடித்த உழைப்பு போன்றவற்றை பெறலாம்.

நல்லெண்ணை ஊற்றி விளக்கு ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், நன்மையும் பெருகும். தேங்காய் எண்ணெய் விநாயகருக்கு சிறப்பானது. இலுப்பை எண்ணை சிவனுக்கு சிறப்பானது. மேற்கொண்ட எல்லா நலன்களையும் பெற நாம் பஞ்சதீப எண்ணெயை உபயோகிக்கலாம். நல்லெண்ணெய், பசு நெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் பஞ்சதீப எண்ணெய்.

நாம் விளக்கு ஏற்றி இறைவனை பிராத்தனை செய்யும் பொழுது, நான் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு எல்லா செல்வங்களையும் கொடு என்று கேட்காமல், அனைவரின் நலன்களையும் மனதில் கொண்டு எல்லோரும் எல்லா வகையான செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது நல்லது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2666 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*