துணை முதல்வரை சந்தித்த கடலோர காவல்படை அதிகாரி காரணம் என்ன?

துணை முதல்வரை சந்தித்த கடலோர காவல்படை அதிகாரி காரணம் என்ன?

Loading...

கடலோர காவல்படையின் (கிழக்கு) பிராந்திய கமாண்டர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ்,கடந்த 17 செப்டம்பர் 2019 அன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

 கடலோரக் காவல்படையால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளை துணை முதலமைச்சரிடம் எடுத்துரைத்த, பரமேஷ், தங்களது படைப்பிரிவின் பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் விவரித்தார். தமிழகக் கடலோரப் பகுதியில், பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

Loading...

மேலும், மீனவர்கள் கடலில் எப்போது துயரங்களுக்கு ஆளானாலும், அவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கும் பணியிலும் கடலோர காவல்படை தொடர்ந்து உதவும் என துணை முதலமைச்சரிடம் உறுதி அளிக்கப்பட்டது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*