தமிழக அரசிற்கு ஜான் பாண்டியன் எச்சரிக்கை காரணம் என்ன?

தமிழக அரசிற்கு ஜான் பாண்டியன் எச்சரிக்கை காரணம் என்ன?

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர்கள் மத்தியில் தேவேந்திரகுலவேளாளர் அரசாணை மற்றும் அயோத்தி தீர்ப்பு குறித்து பேசினார்.

தேவேந்திர குல வேளாளர் அரசாணையை தமிழக அரசு வெளியிடவில்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் . நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் அயோத்தி வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜான் பாண்டியன் அயோத்தியில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க கூடியது என்றும் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கு முன்னர் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை தேவேந்திரகுலவேளாளர் என அரசாணை வெளியிடாததை கண்டித்து அந்த சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

©TNNEWS24

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *