Connect with us

#24 Exclusive

பனிமலர் உதயநிதி விவகாரம் கைது செய்யப்பட்ட கிஷோர் பின்னணி என்ன?

Published

on

பனிமலர் உதயநிதி விவகாரம் கைது செய்யப்பட்ட கிஷோர் பின்னணி என்ன?

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களும் பெரியாரிய, இடதுசாரிய சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களும் தமிழகம் தொடங்கி ஆங்கில ஊடகங்கள் வரை கிஷோர் சுவாமி கைது செய்யப்பட்டதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முதற்காரணமாக பார்க்கப்படுவது சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியீட்டு பிரிவு இணை ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கும் ஊடகவியலாளர் பனிமலர் குறித்த விமர்சனம்தான் என்று தெரியவந்துள்ளது முதலில் பெண் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரை பார்க்கலாம்.

தமிழ்நாடு பெண்கள் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘’ட்விட்டர், சமூகவளைதளங்களில் @sansbarrier என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் கிஷோர் கே.சுவாமி என்ற நபர் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பதிவிட்டு வருகிரார். குறிப்பாக பெண் பத்திரிக்கையாளர்கள் மிகவும் கண்ணியக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் தொடர்ந்து பேசி வருகிறார்

குறிப்பாக காவிரி தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக பணியாற்றி வரும் கனிமொழி என்ற பத்திரிக்கையாளர் குறித்து கண்ணியக்குறைவாக விமர்சிக்கும் வகையில் அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூண்டி விடும் வகையிலும் பேசியுள்ளார்.

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் ‘’ பணியில் உறைந்த மலர் கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்று உதயமான நிதியை அடைய முயற்சிப்பது மிகப்பெரிய சவால்தான்.. என்றாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’’ என்று தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் இணை ஆசிரியராக பணியில் இருக்கும் பத்திரிக்கையாளர் பனிமலர் குறித்து கீழ்த்தரமாக பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் பணியாற்றும் ஹேமா என்ற பத்திரிக்கையாளர் குறித்து கிஷோர் கே.சுவாமி ‘’ஹேமா என்று ஒரு மூதேவி நியூஸ் ஜேவில் இருக்கு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது. ஆனால் மேனேஜ்மெண்டுக்கு நெருக்கம்னு பில்ட் அப். வெத்து வெட்டுகளுக்கு தான் மவுசு அதிகம் என்பதற்கு சிறப்பான உதாரம் இந்த பீஸ்’’ என்று கூறியுள்ளார்.

ஆகையால் கிஷோர் கே.சுவாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என அந்தப்புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த புகாரில் காவல்துறையினர் கிஷோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிஷோர் ஊடகங்களில் பணியாற்றும் பலரை பற்றிய உண்மைகளை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார், அப்படிதான் பனிமலர் மற்றும் உதயநிதி குறித்து பல்வேறு பதவுகளில் பலவற்றை தெரிவித்து வந்தார், இதனால் அதிர்ச்சி அடைந்த பனிமலர் பத்திரிகையாளர் மன்றம் மூலம் திமுகவினர் துணையுடன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் கிஷோரின் திமுகவிற்கு எதிரான இன்டெர்வியூ சமூகவலைத்தளங்களில் அதிகம் ஹிட் அடித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக கிஷோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பெண்களை வைத்து புகார் கொடுத்து கிஷோரை மிரட்ட நினைப்பதாகவும் கூறப்படுகிறது, சமீபத்தில் மாரிதாஸ் முன்வைத்த புகாரின் அடிப்படையில் திமுக வழக்கு தொடுக்காமல் மத மோதலை தூண்டுவதாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share