Connect with us

#24 Exclusive

புவனேஷ்வர் குமாருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது இப்போது அவரின் நிலை என்ன எப்போது அணிக்கு வருவார் ? அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட பிசிசிஐ

இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்களுள் ஒருவர் புவனேஸ்வர் குமார் , முக்கிய கட்டத்தில் ரன் விடாமல் கட்டுப்படுத்தும் திறன்கொண்ட இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின்போது தீராத வயிற்று வலி காரணமாக பாதியில் வெளியேறினார் , பின்னர் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு குடல் இறங்கியுள்ளதை கண்டறிந்தனர்

பின்னர் அதற்கான அறுவை சிகிச்சையை உடனே செய்ய பரிந்துரை செய்தனர் , அறுவை சிகிச்சையை இந்தியாவில் செய்ய பிசிசிஐ பரிந்துரை செய்தது ஆனால் அறுவை சிகிச்சை செய்ய இங்கிலாந்து செல்ல திட்டமிட்ட புவனேஸ்வர் குமார் அதை பிசிசிஐ இடம் கூற பிசிசிஐ இந்திய அணியின் மருத்துவர் ஒருவரை புவனேஸ்வர் குமாருடன் லண்டன் அனுப்பிவைத்தது

கடந்த 9 ஆம் தேதி லண்டன் சென்ற புவனேஸ்வர் குமாருக்கு 11 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள பிசிசிஐ புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பியதாகவும் தொடர்ந்து அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் உடல் பயிற்சிகளை எடுத்துகொள்ளவார் என்றும்

Loading...

சில மாதங்களில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளது , இந்த அறிவிப்பு புவனேஸ்வர் குமார் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இப்போது புவனேஸ்வர் உடல் நலம் தேறி வருவதால் ஐபிஎல் முடிந்த பின்பு அவர் நேரடியாக இந்திய அணிக்கு வர வாய்ப்புகள் உள்ளது ஆனால் நிச்சயம் ஐபிஎல் விளையாடமாட்டார்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending