Connect with us

#24 Exclusive

குடியுரிமை சட்டம்: மேற்குவங்க மாநிலத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமைச்சட்டம் முறையாக தாக்கல் செய்யப்பட்டு அதன் பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உள்ளாகி தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் குடியுரிமைச் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் மாணவர்களையும் தூண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒரு சில மாநில முதல்வர்கள் குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் குடியுரிமை சட்டம் குறித்த வழக்கு ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்வதை நிறுத்துங்கள் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது

Loading...

பாராளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று ஒரு மாநில முதல்வரை சொல்வது சரியானது அல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேற்குவங்க உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் மேற்குவங்க அரசு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது

Loading...
Loading...

Trending