காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது !

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது !

ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்

அதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் வாரம் ஒருநாள் விடுமுறை என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெகன்மோகன்.

தேர்தலுக்கு முன்பே பல காவலர்கள் வாரம் ஒருநாள் விடுமுறை தந்தால் எங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக அந்த நாளை கழிக்க முடியும் மீதம் உள்ள நாட்களில் எந்த வித அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடியும் என்று ஜெகன் மோகன் ரெட்டியிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

Loading...

இதை தான் நிச்சயம் ஆட்சிக்கு வந்ததும் செய்வதாக அவர் உறுதியளித்த நிலையில் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

Loading...

இதுவரை தமிழகம் உள்பட எந்த மாநிலத்திலும் காவல்துறையினருக்கு வாராந்திர விடுமுறை என்பது கிடையாது முதல் முதலில் ஆந்திராவில் தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *